

‘உலக கை கழுவும் தினம்’ ஒவ் வொரு ஆண்டும் அக்டோபர் 15-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாட்டில் அக்டோபர் 15-ம் தேதி முதல் நவம் பர் 14-ம் தேதி வரை ஒரு கோடி குடும்பங்களிடம் விழிப்புணர்வு ஏற் படுத்த யுனிசெப் (ஐ.நா. குழந்தை களுக்கான நிதி நிறுவனம்) முடிவு செய்துள்ளது.
குழந்தைகள் இறப்புக்கு முக் கிய காரணமாக உள்ள நிமோனியா, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்களை தடுப்பதற்கு கைகளை சோப் போட்டு கழுவுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 2008-ம் ஆண்டு முதல் ‘உலக கை கழுவும் தினம்’ அனுசரிக்கப்படுகிறது. 2013-ம் ஆண்டு ஐ.நா வெளியிட்டுள்ள தகவல்கள்படி ஆண்டுக்கு 3.8 லட்சம் குழந்தைகள் பாதுகாப்பற்ற தண்ணீர், சுகாதாரமற்ற சூழல் ஆகியவற்றால் ஏற்படும் நோய்களால் உயிரிழக்கின்றனர்.
இது குறித்து யுனிசெப் நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் கேரளம் பிரிவு தலைவர் ஜாப் ஜக்கரியா ‘தி இந்து’விடம் கூறியதாவது:
கைகளை தண்ணீரால் மட்டுமல்லாது சோப் போட்டு கழுவுவதன் மூலம் பல கொடிய நோய்களை தடுக்க முடியும். ஆனால், கை கழுவுவது சாதாரண விஷயம் என்பதாலேயே அதை பலர் பின்பற்றுவதில்லை. தமிழ்நாட்டில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் ஒரு கோடி மாணவர்கள் உள்ளனர். இவர்களை பள்ளிகளில் சந்தித்து கை கழுவுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் அவர்களின் குடும்பங் களிடமும் விழிப்புணர்வை ஏற் படுத்தவுள்ளோம். இதற்காக அர சுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளோம்.
இந்திய மருத்துவர் சங்கம் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவர்களிடமும் இந்த கோரிக்கையை வலியுறுத்து வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.