

செங்கம் அருகே கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது கிரேன் முறிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் பரமனந்தல் கிராமத்தில் வசிப்பவர் சின்னராஜ். இவரது விவசாய நிலத்தில் கிணறு தோண்டும் பணி நேற்று நடைபெற்றது.
அந்த பணியில் கொட்டாவூர் கிராமத்தில் வசிக்கும் 7 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அவர்களில் கிணற்றின் உள்ளே இருந்த 5 தொழிலாளர்கள், கிரேன் மூலம் மேலே வந்துள்ளனர். அப்போது கிரேன் முறிந்து விழுந்தது. அதில் நான்கு தொழிலாளர்கள், கிணற்றின் உள்ளே விழுந்து படுகாய மடைந்தனர். அவர்க ளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவர்கள் மீட்கப் பட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் சின்னபையன் (38), பழனி (30) ஆகியோர் உயிரிழந்தனர். செல்வம் (39), ஜெகன் (35) ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து செங்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றனர்.