

துணைவேந்தர் சுரப்பா மீதான புகார்களை விசாரிக்கும் ஆணையத்துக்கு புதிதாக உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் 13 பேரை நியமித்து உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலை. துணைவேந்தர் எம்.கே.சுரப்பா மீது ரூ.280கோடி ஊழல் குற்றச்சாட்டு புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தமுன்னாள் நீதிபதி பி.கலையரசனை அதிகாரியாக நியமித்து, 3 மாதங்களுக்குள் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய உயர் கல்வித் துறை உத்தரவிட்டது.
இந்நிலையில் நீதிபதி கலையரசன் தலைமையிலான ஆணையத்துக்கு உயர்கல்வித் துறை துணைச் செயலர் சங்கீதா, ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை எஸ்பி பொன்னி, உயர் நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன், வழக்கறிஞர் சாய் பிரசாத், ஓய்வுபெற்ற நிதித் துறை கூடுதல் செயலர் முத்து ஆகிய 5 பேரை புதிய உறுப்பினர்களாக நியமித்து உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதவிர ஆணையத்துக்கு தனிச் செயலர், தட்டச்சர், டிஎஸ்பிஅளவிலான அதிகாரி, நீதிமன்ற அலுவலர், உதவியாளர், கிளார்க்,அலுவலக உதவியாளர், துப்புரவுப்பணியாளர் என்று 8 பணியாளர்களும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், ஜல்லிக்கட்டு விசாரணை ஆணையத்தின் அலுவலகம் செயல்பட்ட சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ளபொதிகை இல்லம் விசாரணைஆணையத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஓரிரு நாட்களில் விசாரணை ஆணையத்தின் பணிகள் முழுவீச்சில் தொடங் கப்படும் என்று தகவல்கள் கிடைத் துள்ளன.