கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்: எஸ்எப்ஐ வலியுறுத்தல்

கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்: எஸ்எப்ஐ வலியுறுத்தல்

Published on

கல்வி உரிமைச் சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்எப்ஐ) வலியுறுத்தியுள்ளது.

மாநிலத் தலைவர் பி.உச்சிமா காளி தலைமையில் எஸ்எப்ஐ மாநிலக்குழு கூட்டம், சென்னை யில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. மாநிலச் செயலாளர் ஜோ.ராஜ் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவீத இடங்களில் நலிந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களை சேர்க்காத தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

கடந்த ஆண்டு இடஒதுக்கீட்டின் படி சேர்த்த ஏழை மாணவர்க ளிடம் பள்ளி நிர்வாகங்கள் அரசிடமிருந்து நிதி வந்தபிறகு திருப்பித் தருகிறோம் என்று சொல்லி பணம் வசூலித்துள்ளனர். அந்தக் கட்டணங்களை முழுமை யாக மாணவர்களிடம் திருப்பித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி உரிமைச் சட்டத் துக்கு தேவையான நிதி ஒதுக் கீட்டை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் கழிவறை, குடிநீர், வகுப்பறைகள், ஆய்வகங் கள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உரிய அங்கீகாரம் இல்லாமல் 1,296 தனியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் இயங்குவதாக கல்வித்துறை அறிவித்துள்ளது. முதல்கட்டமாக 723 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ரத்து செய் யப்பட்டதாகவும் தெரிவித்துள் ளது. அந்தப் பள்ளிகளின் பட்டி யலை வெளியிட வேண்டும். இப்பள்ளிகளில் பயிலும் மாண வர்களை அரசின் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு மாற்ற நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in