Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM

தமிழகத்தில் வரும் தேர்தலிலும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்: ஓபிஎஸ், இபிஎஸ் உறுதி

தமிழகத்தில் வரும் தேர்தலிலும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உறுதிபட தெரிவித்தனர்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில், முதல்வர் பழனிசாமி தலைமை உரை நிகழ்த்தி பேசியதாவது:

தமிழக அரசு அமைதி, வளம், வளர்ச்சி யின் அடிப்படையில் நாட்டின் முன்னேற் றம் மற்றும் வளர்ச்சியின் பயனை அனைத்து மக்களும் பெறும் வகையில் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வரு கிறது. இதனால்தான் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

தமிழகத்தில் சோழர் காலத்திலேயே நீர்மேலாண்மை திட்டங்கள் செயல்படுத் தப்பட்டன. தற்போது குடிமராமத்து திட்டத் தில் 6,278 குளங்கள் உள்ளிட்ட நீர்நிலை கள் ரூ.1,433 கோடியில் சீரமைக்கப்பட்டுள் ளன. மற்ற நீர்நிலைகள், சிறிய குளங்கள் போன்றவை ஊரக வளர்ச்சித் துறையால் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம், நீர்நிலைகளின் கொள்ளளவு அதி கரித்துள்ளது. நிலத்தடி நீரும் உயர்ந்துள் ளது. இதன் காரணமாக பாசனப் பரப்பும், பயிர் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் வகையில், சென்னை மக்களின் குடிநீர் தேவையை தீர்க்க தற்போது ரூ.380 கோடியில் செயல்பாட்டுக்கு வந்துள்ள தேர்வாய்க்கண்டிகை நீர்த்தேக்க திட்டம்போல பல நீர்வள ஆதாரத் திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளன.

தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பு உள் ளிட்ட திட்டங்களை செயல்படுத்தியதால், நிலத்தடி நீர் உயர வழிவகை செய்யப் பட்டுள்ளது. இந்த முயற்சிகளால்தான் 2019-20 ஆண்டுக்கான நீர் மேலாண்மைக் கான முதல் மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டு, தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

மாநில அரசின் சில திட்டங்களுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. அவற்றுக்கு மத்திய அரசு விரைவில் அனுமதி அளிக்க வேண்டும். சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு 50 சதவீத நிதியை வழங்க வேண்டும்.

கரோனா காலத்தில் பல்வேறு தொகுப்பு திட்டங்களை செயல்படுத்தி யதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரி வித்துக் கொள்கிறேன். கடும் சோதனை யான காலத்திலும், வல்லரசு நாடுகளே பாராட்டும் அளவுக்கு பிரதமர் மோடி ஆட்சி செய்து வருகிறார். நோய்ப் பரவலை தடுக்க கடும் முயற்சி செய்து வருகிறார். அவரது முயற்சிக்கு தமிழகம் எப்போதும் துணை நிற்கும்.

அதிமுக தொடர்ந்து 10 ஆண்டு களாக சிறப்பான ஆட்சியை தந்துள் ளது. தேசிய அளவில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளோம். அந்த அளவுக்கு சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி தொடரும். வரும் 2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தலிலும் இந்த கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

முன்னதாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

சிறந்த நிர்வாகம் மூலம் மத்திய அமைச்சர் அமித்ஷா தன்னை நிரூபித்துள் ளார். இளம் வயதில் உள்துறையை நிர்வகித்து வரும் அவர், ஆழ்ந்த அறிவு மற்றும் அனுபவத்துடன், நவீன உலகின் சாணக்கியனாக திகழ்கிறார்.

3-வது முறையும் வெற்றி

கடந்த 2011 முதல் இன்று வரை தமிழக அரசு அனைத்து துறைகளிலும் சாதனைகள் படைத்துள்ளது. தமிழக மக்களின் பாராட்டுகளை தொடர்ந்து பெற்று வருகிறது. தமிழக மக்கள் என்றும் எங்கள் பக்கம், நாங்கள் என்றும் மக்கள் பக்கம். அரசின் சாதனைகளை மக்கள் பாராட்டுவதைப் பார்த்து, எதிர்க்கட்சிகள் பரிதவிக்கின்றன. அரசுக்கு மக்கள் செல் வாக்கு அதிகரிப்பதைப் பார்த்து பொறுக்கமுடியாமல் குற்றம் சாட்டுகின்றனர். ஜெயலலிதா வளர்த்த சிங்கங் கள்தான் அதிமுக தொண்டர்கள். தொடர்ந்து 3-வது முறையும் வெற்றி பெறுவோம்.

தேசிய அளவில் இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்கும் முயற்சி யில் பிரதமர் மோடி ஆற்றலுடன் செயல்பட்டு வருகிறார். அதிமுக - பாஜக வெற்றிக் கூட்டணி வரும் தேர்தலிலும் தொடரும். கரோனா தடுப்பிலும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x