நவிமும்பை, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கங்களுக்கு தமிழ்த்தாய் விருதுகள்: முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

நவிமும்பை, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கங்களுக்கு தமிழ்த்தாய் விருதுகள்: முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்
Updated on
1 min read

கடந்த 2014 மற்றும் இந்த ஆண்டுக் கான தமிழ்த்தாய் விருதுகளை, நவிமும்பை மற்றும் திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த 2014-ம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருதுக்கு நவி மும்பை தமிழ்ச் சங்கம் தேர்வு செய் யப்பட்டது. தலைமைச் செயலகத் தில் நடந்த நிகழ்ச்சியில் விருது, ரூ.5 லட்சத்துக்கான காசோலை மற்றும் கேடயம் ஆகியவற்றை சங்க தலைவர் நா.மகாதேவன், சிறப்பு ஆலோசகர் வ.ரெ.பொ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

இந்த ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்துக்கு வழங்கப்பட்டது. விருதை சங்க செயலாளர் எல்.கிருஷ்ணவேணி, துணைத் தலைவர் எஸ்.சங்கரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

மேலும், 2014-ம் ஆண்டுக்கான கபிலர் விருது அ.இலலிதா சுந்தரத் துக்கும், உ.வே.சா. விருது ம.அழகு ராஜ் என்ற மருது அழகுராஜிக்கும், கம்பர் விருது செ.வை.சண்முகத் துக்கும், சொல்லின் செல்வர் விருது சுதா சேஷய்யனுக்கும், ஜி.யு.போப் விருது ஜெ.நாராயண சாமிக்கும், உமறுப்புலவர் விருது சேமுமு.முகமதலிக்கும் வழங்கப் பட்டது.

இந்த ஆண்டுக்கான கபிலர் விருது கவிஞர் பிறைசூடனுக்கும், உ.வே.சா. விருது குடவாயில் மு.பாலசுப்ரமணியனுக்கும், கம்பர் விருது கோ.செல்வனுக்கும், சொல் லின் செல்வர் விருது சோ.சத்திய சீலனுக்கும் வழங்கப்பட்டது.

ஜி.யு.போப் விருது மை.ஆரோக் கியசாமிக்கும், உமறுப்புலவர் விருது மு.சாயபு மரைக்காயருக் கும், புதிதாக அறிவிக்கப்பட்ட இளங்கோவடிகள் விருது நிர் மலா மோகனுக்கும் முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்டது.

கடந்த 2013-ம் ஆண்டுக்கான முதல்வர் கணினித் தமிழ் விருதை ந.தெய்வசுந்தரத்துக்கும், 2014-ம் ஆண்டுக்கான விருதை து.குமரேச னுக்கும் முதல்வர் வழங்கினார்.

அப்போது முதல்வர் ஜெய லலிதா பேசும்போது, ‘‘இத்தனை தமிழறிஞர்களுக்கு ஒரு சேர விருது வழங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததால் நான் பெருமை அடைகிறேன்’’ என்றார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பா.வளர்மதி, கே.சி.வீரமணி, தலைமைச் செயலர் கு.ஞான தேசிகன், துறை செயலர்கள் பொ.சிவசங்கரன், மூ.ராசாராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in