1504 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்: தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

1504 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்: தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆய்வு
Updated on
1 min read

தென்காசி மாவட்டத்தில் 1504 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் உள்ட்ட பணிகளை மேற்கொள்ள சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதனை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தென்காசி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை கடந்த 16-ம் தேதி ஆட்சியர் சமீரன் வெளியிட்டார். சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 6 லட்சத்து 34 ஆயிரத்து 450 ஆண் வாக்காளர்கள், 6 லட்சத்து 57 ஆயிரத்து 191 பெண் வாக்காளர்கள், மூன்றாம்பாலின வாக்காளர்கள் 40 பேர் என மொத்தம் 12 லட்சத்து 91 ஆயிரத்து 681 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் நவம்பர் 21, 22, டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. www.nvsp.in என்ற தேர்தல் ஆணைய இளையதளத்திலும் பதிவு செய்யலாம்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 1504 வாக்குச்சாவடி மையங்களிலும் நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது. தென்காசி மஞ்சம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமை தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in