

காங்கிரஸ் மகளிரணியின் தேசிய செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த ஹசீனா சையத் நிய மிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திவேதி டெல்லியில் நேற்று வெளியிட்டார். சென் னையைச் சேர்ந்த ஹசீனா சையத் தற்போது தமிழக காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு செயலாளராக இருந்து வருகிறார்.
மகளிரணி தேசிய செய லாளராக நியமிக்கப்பட்டது குறித்து ஹசீனா சையத் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
கல்லூரி காலத்தில் இருந்தே நான் காங்கிரஸில் இருந்து வருகிறேன். சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளராக கட்சி பணியாற்றிய எனக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இந்த பொறுப்பை வழங்கியுள்ளனர்.
பெண்கள் மற்றும் சிறுபான் மையினரின் ஆதரவை காங்கிரஸ் கட்சி மீண்டும் பெறுவதற்குப் பாடுபடுவேன். மதுவிலக்கு, விலை வாசி உயர்வு, மத்திய பாஜக அரசின் மதவாத செயல்திட்டங் கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சி னைகளுக்காக தமிழகத்தில் மகளிரணி சார்பில் போராட்டங் களை நடத்துவோம். வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பலத்தை உயர்த்த மகளிரணி சார் பில் தீவிரமாக பிரச்சாரம் செய் வோம் என்றார்.