

புதுக்கோட்டை மாவட்டம் ஊனையூர் அருகே ஆலமரத்து குடியிருப்பைச் சேர்ந்த அருண்பாண்டி(28). நவ.15-ம் தேதி சவேரியார்புரத்தில் இருந்து திருமயத்துக்கு பைக்கில் வந்துகொண்டிருந்தார்.
கொசப்பட்டி கண்மாய் பகுதியில் பைக் மீது, எதிரே கவிஞரும் மக்கள் நீதி மய்யம் கட்சி மாநில இளைஞரணி செயலாளருமான எஸ்.சினேகன் ஓட்டிச் சென்ற கார் மோதியது. காயமடைந்த அருண்பாண்டி திருச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார்.
இதையடுத்து திருமயம் போலீஸார், சினேகன் மீது 2 பிரிவுகளில் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.