

ஒரு மனிதனின் ஆரோக்கியத்தில் மிக மிக முக்கியமானது மன நலம். உடலின் புறத் தூய்மையைக் காட்டிலும் அகத் தூய் மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவேண்டும். அந்த அகத் தூய்மை என்பது உடலின் அகத்தே உருவாகும் நோய்களை குறிப்பது அல்ல. அது முற்றிலும் மனம் - மன நலம் சார்ந்தது.
மன அழுத்தத்துடன் தான் நடத்திய போராட்டத்தை, அதை எப்படி வெல்ல முடிந்தது என்ற தன் சொந்த அனுபவத்தைக் கூறுகிறார் ஜரூக் ஷா.
மனம் - அது மிகவும் வலிமையானது. உங்களை வெகு உயரத் துக்குக் கொண்டு செல்லவோ, அல்லது உங்களை முற்றிலுமாக அழித்துவிடவோ அதனால் மட்டுமே முடியும். பெரும்பாலானவர்கள் மனதின் இந்த நிலையற்ற தன் மைக்கு இரையாகி விடுகின்றனர். ஒருசிலரே அதை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுகின்றனர். அவ்வாறு வெற்றிபெற்ற ஒருசிலரில் ஒருவன் என்பதை எண்ணி நான் பெருமைப்படுகிறேன்.
அன்பான ஒரு பெரிய குடும் பத்தில் பிறந்தவன் நான். எங்களது குடும்பத் தொழிலான வைர வியாபாரத்தை கவனித்துக் கொள்வதற்காக 1990களில் ஜப் பான் தலைநகர் டோக்கியோ சென் றேன். 2002-ம் ஆண்டு வரை எல் லாமே நன்றாகத்தான் போனது. அந்த ஆண்டில்தான் எங்களது தாய்லாந்து கிளையில் மிகப் பெரிய நஷ்டத்தை நான் எதிர்கொள்ள நேரிட் டது. இந்த அதிர்ச்சி என் மனதை பெரிதும் பாதிக்கத் தொடங்கியது.
ஒரு நிமிடம்கூட உறங்க முடியாத நிலையில் இரவுகள் என்னை தொடர்ந்து பயமுறுத்திக் கொண்டே இருந்தன. இந்த சமயத்தில் எனக்கு ஆறுதலாக, துணையாக என் மனைவி எப்போதும் அருகி லிருந்தார். முதலில் குடும்ப மருத் துவரின் ஆலோசனைப்படி உறக் கம்வரத் தூண்டும் மருந்துகளை எடுத்துக் கொள்ளத் தொடங்கி னேன். எல்லாம் ஒரு மணி நேரம்தான். வியர்த்து விறுவிறுத்து நடுக்கத்துடன் எழுந்து கொள்வேன்.
பசியும் இழந்து, வேலைகளில் விருப்பத்தை இழந்து, யாருட னும் பேசுவதற்குக்கூட பயப்படும் நிலையை எட்டினேன் இறந்தவ னைப் போல ஜடமாக நடமாடிக் கொண்டிருந்தேன். ஏன் தூக்கம் வர வில்லை? எப்படி தூங்குவது? இதுவே என் ஒரே சிந்தனை. ஏதோ ஒரு அட்டைப் பெட்டிக்குள் அடைந்து கிடக்கும் மூளையைச் சுற்றி பயங்கரமான சிந்தனைகள் ஓடிக்கொண்டிருப்பதைப் போல் எனக்குத் தோன்றியது.
இந்நிலையில் டோக்கியோவில் ஒரு உளவியல் நிபுணரை சந்திக்க முடிந்தது. அவர் என்னை பரிசோ தித்து கவலையினால் உண்டான மன அழுத்தத்தினால் நான் கவலைப்படுவதாகக் கூறினார். மன அழுத்தத்தைக் குறைப்பதற் கான மருந்துகளையும், தூக்க மாத்திரைகளையும் பரிந்துரைத் தார். மெதுவாக நான் எடுத்துக் கொண்ட மருந்துகள் வேலை செய் யத் தொடங்கின. ஓரளவு நன்றா வதை உணரத் தொடங்கினேன். நான் விரும்பிச் செய்து வந்த வேலையைத் தொடர அவை எனக்கு உதவி செய்தன. இரண் டாண்டுகளுக்குப் பிறகு மன அழுத் தத்துக்காக நான் எடுத்துக் கொண்ட மாத்திரைகளை நிறுத்த முடிந்தது. என்றாலும் தூக்க மாத் திரைகளுடனான எனது போராட் டம் தொடர்ந்தது. சில ஆண்டுகளுக்கு முன்புதான் அதையும் வெற்றி கொள்ள என்னால் முடிந்தது.
என் ஆலோசனை இதுதான்: உங்கள் மன வளம் குறித்து எப்போதுமே கவனமாக இருங்கள். அவசியமானபோது இத்துறையில் உள்ள நிபுணர்களின் உதவியை நாடுங்கள். யாருடனாவது பேசுங் கள். சரியானதொரு உளவியல் நிபுணருடன் உங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொள்வது பேருதவியாக இருக்கும்.
(தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியான கட்டுரை.தமிழில்: மகன்தீப் பாகிஸ்ரீ)
*
மனநோய் வரக் காரணம் என்ன?
- ஒய்.ஆண்டனி செல்வராஜ்
மனநோய் வருவதற்கான காரணம் குறித்து மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை மருத்துவர் எஸ்.ஜே.எக்ஸ். சுகதேவ் கூறியதாவது:
மனநோய்கள் சூழ்நிலைகளாலும், மனித னைச் சுற்றி நடக்கக்கூடிய ஒவ்வொரு செயல் களாலும் மட்டுமே ஏற்படுகிறது என்றும், அதிகம் கவலைப்படுவதாலும், சரியாக புரிந்து கொள்ளாததாலும் மனநோய் ஏற்படுகிறது என்றும் தவறான கருத்துகள் மக்களிடம் மிக ஆழமாக வேரூன்றி உள்ளது. மனநோய் பற்றிய பொதுவான புரிந்து கொள்ளுதலில் உள்ள குறைபாடுகளை களைவதன் மூலம், மனநோயாளிகளின் கண்ணியத்தை பாதுகாக்க முடியும். ‘மனது’ என்பது மூளை சம்பந் தப்பட்டது. மூளையின் செயல்பாடுதான் மனதாக உணரப்படுகிறது.
ஒருவருடைய சிந்தனைகள், உணர்வுகள், செயல்பாடுகள், ஐம்புலன்களால் உணர்ந்தறியும் தன்மை மூளையிலேயே நடக்கின்றன. இவை அனைத்தும் மூளையின் செயல்பாடுகளே. மூளையில் ஏற்படும் குறைபாடுகளும், இன்னும் முழுமையாக அறியப்பட முடியாத குறைபாடுகளாலேயே ‘மனநோய்கள்’ ஏற்படுகின்றன.
மின் அதிர்வு சிகிச்சை, உளவியல் சார்ந்த சிகிச்சை முறைகள் மூலம் மனநோய்களை கட்டுப்படுத்தி குணப்படுத்தவும், தடுக்கவும் முடியும். சமுதாயத்தில் மனநோயால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒற்றை சொல்லின்கீழ் வகைப்படுத்தப்படுகின்றனர். ஆனால், உண்மையில் நூற்றுக்கணக்கான வேறுபட்ட மன நோய்கள் உள்ளன. பெரும்பாலான மனநோய்கள் சாதாரணமான மன நோய்களே.
மன நோயால் பாதிக்கப்பட்டவர்களின் செயல்பாடுகளில் சிலவற்றில் தான் குறைபாடுகள் ஏற்படுகிறது. அவர்களுடைய சிந்திக்கும் திறன், உணர்ந்தறியும் திறன் முழுமையாக பாதிக்கப்படுவதில்லை. சராசரி மனிதனுக்கு உள்ள அனைத்து உரிமைகளும், சுய மரியாதையும் அவர்களுக்கும் உண்டு. அவர்களை கண்ணியமாக நடத்துவதன் மூலமே, அவர்களுடைய நோய்களுக்கான சரியான விஞ்ஞானப்பூர்வமான சிகிச்சையை வழங்க முடியும். அவர்கள் வாழ்க்கை தரத்தையும் உயர்த்த முடியும். இதனை உள்ளடக்கிய மனநலத்துக்கான புதிய சட்டங்களை இயற்றுவதன் மூலமே மன நோயாளிகளின் கண்ணியத்தையும் தனி மனித உரிமைகளையும் பாதுகாக்க முடியும். இது சம்பந்தமாக மக்களிடம் ஏற்படும் விழிப்புணர்வும், புரிந்து கொள்ளுதலுமே அரசுகள் உரிய சட்டங்களை இயற்றுவதற்கான உந்துதலாக அமையும் என்றார்.
சுகதேவ்