Published : 20 Nov 2020 05:38 PM
Last Updated : 20 Nov 2020 05:38 PM

தமிழக மீனவர்களின் நாட்டுப் படகுகளை மீட்டுத்தருக: மத்திய அரசைக் கண்டித்து பாம்பனில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் நாட்டுப் படகுகளை மீட்டுத்தராத மத்திய அரசைக் கண்டித்து பாம்பனில் மீனவர்கள் கடலில் இறங்கி வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு பராமரிப்பின்றி சேதமடைந்த 121 தமிழக மீனவர்களின் படகுகளை அழிக்க அந்நாட்டு நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளது.

இதில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மற்றும் நம்புதாளையைச் சார்ந்த 19 நாட்டுப்படகுகளும் அடங்கும்.

இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக நாட்டுப்படகு மீனவர்களின் 19 நாட்டுப்படகுகளை மீட்டுதரத் தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் படகுகளை இழந்து தவிக்கும் மீனவர்களுக்கு மாற்றுப் படகுகள் வழங்கிடக் கோரியும் கடல் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பாக பாம்பன் கடலில் இறங்கி கண்டண ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடல் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் இ.ஜஸ்டின் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கருணாமூர்த்தி முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 19 நாட்டுப்படகுகளுக்கும் இழப்பீடு பெற்றுத் தரவேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான மீனவப் பெண்களும் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x