Last Updated : 20 Nov, 2020 05:22 PM

 

Published : 20 Nov 2020 05:22 PM
Last Updated : 20 Nov 2020 05:22 PM

நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவரைக் காப்பாற்றிய போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு 

நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவரைப் போலீஸார் காப்பாற்றினர். அவர்களை எஸ்.பி. பத்ரிநாராயணன் வெகுவாகப் பாராட்டினார்.

குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலத்தை அடுத்துள்ள ஆலங்கோட்டைபுதூரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(65). இவர் அறக்கட்டளை ஒன்றின் தலைவராக இருந்து வந்தார்.

அந்த அறக்கட்டளையின் தற்போதைய தலைவராக இருப்பவர், தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும், அதன் நிர்வாகிகள் மனரீதியாக தொல்லை கொடுத்து வருவதாகவம் குற்றம்சாட்டி வந்தார்.

இது தொடர்பாக வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பாலகிருஷ்ணன் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைக்க முயன்றார். அப்போது அங்கு பணியில் இருந்த நேசமணி காவல் நிலைய பயிற்சி எஸ்.ஐ. அருணாச்சலம், சிறப்பு எஸ்.ஐ. முருகன், தனிப்பிரிவு ஏட்டு கிருஷ்ணகுமார், மற்றும் போலீஸார் அவரை தடுத்துக் காப்பாற்றினர்.

பின்னர் அங்கிருந்து பாலகிருஷ்ணனை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரைக் காப்பாற்றிய போலீஸாரை எஸ்.பி. பத்ரி நாராயணன் வெகுமதி, மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x