

‘திமுக ஆட்சிக்கு வந்தால் லாரி, கோழிப் பண்ணை தொழிலில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்’ என நாமக்கல்லில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் நமக்கு நாமே விடியல் மீட்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதல் நிகழ்வாக நாமக்கல் கோழிப் பண்ணையாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கலந்துரை யாடினார். அப்போது, கோழிப் பண்ணையாளர்கள் தரப்பில் தமிழ்நாடு முட்டைக் கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வாங்கிலி சுப்ரமணியம், தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளர்கள் விற் பனை சங்க துணைத் தலைவர் சி.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்கள் ‘சத்துணவு முட்டை கொள்முதல் ஒப்பந்தம் தனிநபருக்கு வழங்கப் பட்டுள்ளதை ரத்து செய்து, அனைத்து பண்ணையாளர்களும் பங்கேற்கும் பழைய நடை முறையை கொண்டுவர வேண் டும். கோழிப்பண்ணை கட்டுமானத் துக்கு நகர் ஊரமைப்பு இயக்கு நரின் அனுமதி பெற வேண்டும் என்ற விதி உள்ளது. இதை மாற்றி முன்பு இருந்தது போல், கிராம ஊராட்சிகளின் அனுமதி போதும் என்பதை நடைமுறை படுத்த வேண்டும். கோழிப் பண்ணையாளர்களின் குறைகளை தீர்த்துக்கொள்ள நல வாரியம் ஏற்படுத்த வேண்டும். விவசாய இலவச மின் இணைப்பில் இருந்து கோழிப்பண்ணைகளுக்கு தண்ணீர் எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
கோழிப்பண்ணைத் தொழி லுக்கு தனியே கட்டண விகிதம் உருவாக்கி சலுகை கட்டணத்தில் மின்சாரம் விநியோகம் செய்ய வேண்டும். தொழில் ஆரம்பித்தால் உடனடி யாக மும்முனை மின் இணைப்பு வழங்க வேண்டும். கோழிகளின் முக்கியத்தீவன பொருளான மக்காச்சோளத்தை அரசே கொள்முதல் செய்து, கிடங்குகளில் சேமித்து வைத்து நெருக்கடியான நேரங்களில் பண்ணையாளர்களுக்கு வழங்க வேண்டும்’ ஆகிய கோரிக்கை களை ஸ்டாலினின் முன்வைத்தனர்.
தொடர்ந்து லாரி உரிமை யாளர்களிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது லாரி உரிமையாளர்கள் தரப்பில் பங்கேற்ற மாநில லாரி உரிமை யாளர்கள் சம்மேளன தலைவர் கே.நல்லதம்பி ஸ்டாலினிடம் சில கோரிக்கைகளை முன் வைத்தார்.
அதைத் தொடர்ந்து மு.க. ஸ்டாலின் பேசும்போது, ‘கடந்த காலங்களில் ஒரே இடத்தில் உட்கார்ந்துகொண்டு தயாரிக்கப் பட்ட திமுக தேர்தல் அறிக்கை, இப்போது மக்களின் கருத்து கேட்டுத் தயாரிக்கப்படுகிறது. இந்தத் தேர்தல் அறிக்கையில் லாரி, கோழிப் பண்ணை தொழில் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும் உறுதி அளிக்கப் படும். திமுக ஆட்சிக்கு வந்தால் இத்தொழிலில் உள்ள பிரிச்சினை கள் தீர்த்துவைக்கப்படும்’ என்றார்.
இதைத் தொடர்ந்து பரமத்தி வேலூரில் விவசாயிகளைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரை யாடி அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார் ஸ்டாலின்.