வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை கண்காணிக்க 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு முக்கிய ஆலோசனை 

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேற்று ஆலோசனை நடத்தினார். படம்: க.ஸ்ரீபரத்
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேற்று ஆலோசனை நடத்தினார். படம்: க.ஸ்ரீபரத்
Updated on
1 min read

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள 10 ஐஏஎஸ் அதிகாரிகளுடன், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வரும் 21, 22-ம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை கண்காணிக்க இந்திய தேர்தல் ஆணையம் 10 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை பார்வையாளர்களாக நியமித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை ஆணையர் அதுல் ஆனந்த், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டைக்கு குடிசை மாற்று வாரிய மேலாண் இயக்குநர் ஆர். கிர்லோஷ்குமார், மதுரை, தேனி, விருதுநகருக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக மேலாண் இயக்குநர் சிஜி தாமஸ் வைத்யன், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூருக்கு அருங்காட்சியக ஆணையர் ம.க.சண்முகம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசிக்கு தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவன மேலாண் இயக்குநர், பா.ஜோதி நிர்மலா சாமி.

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலைக்கு பால் உற்பத்தி ஆணையர் மா.வள்ளலார், நாமக்கல், கரூர், திண்டுக்கல்லுக்கு தமிழ்நாடு செய்தித்தாள், காகித நிறுவன மேலாண் இயக்குநர் க.சிவசண்முகராஜா, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டைக்கு சமூகநல ஆணையர் த.ஆபிரகாம், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடுக்கு கைத்தறி, துணிநூல் துறை இயக்குநர் மு.கருணாகரன், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூருக்கு உணவுப் பொருள் வழங்கல் ஆணையர் சஜ்ஜன் சிங் ரா.சவான் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பார்வையாளர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு குறைந்தபட்சம் 3 முறையாவது பயணம் மேற்கொண்டு பட்டியல் திருத்தப் பணிகளை பார்வையிட்டு, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கூட்டங்கள் நடத்துவார்கள். பொதுமக்களை சந்தித்தும் வாக்காளர் பட்டியல் சார்ந்த புகார்கள் குறித்தும் ஆய்வு செய்வார்கள். இப்பணிகள் தொடர்பாக வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக அவர்களுக்கு
பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in