அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்யாத 3 ஆயிரம் பக்தர்களுக்கு தினசரி அனுமதி: தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு

அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்யாத 3 ஆயிரம் பக்தர்களுக்கு தினசரி அனுமதி: தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு
Updated on
1 min read

கார்த்திகை தீபத் திருவிழாவில் தி.மலை அண்ணாமலையார் கோயிலில் முன்னுரிமை அடிப்ப டையில் முன்பதிவு செய்யாத 3 ஆயிரம் பக்தர்கள் தினசரி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

கார்த்திகை தீபத் திருவிழா தொடர்பான ஆய்வுக் கூட்டம் தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் நேற்று இரவு நடைபெற்றது. ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு கரோனா தொற்றால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அண்ணா மலையார் கோயிலில் ஆன்லைன் பதிவு மூலம் 5 ஆயிரம் பேருக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப் படுகிறது. மேலும், முன்பதிவு இல்லாமல் வரும் பக்தர்களை, முன்னுரிமை அடிப்படையில் தினசரி முதலில் வரும் 3 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதேநேரத்தில் 29-ம் தேதி (பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படும் நாளில்) விஐபி மற்றும் விவிஐபிக்கள் உட்பட யாருக்கும் அனுமதி கிடையாது.

கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது. வரும் 28 மற்றும் 29-ம் தேதி என இரண்டு நாட்களுக்கு, வெளி ஊர்களைச் சேர்ந்தவர்கள், நகரம் உள்ளே நுழைய தடை விதிக்கப் பட்டுள்ளது. இதனை கண்காணித்து தடுக்க 18 இடங்களில் சோதனைச் சாவடி அமைக்கப்பட உள்ளது. தி.மலை நகரைச் சேர்ந்தவர்கள், உரிய அடையாள அட்டையை காண்பித்து உள்ளே வர அனுமதி வழங்கப்படும்.

பவுர்ணமி மற்றும் தீபத் திரு நாளில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுகிறது. கிரிவலப்பாதையில் அன்னதானம் வழங் கவும் தடை செய்யப்படுகிறது. அண்ணாமலை உச்சியில் 11 நாட்களுக்கு மகா தீபம் ஏற்றப்படும். மகாதீபம் ஏற்றும் பணியில் ஈடுபடும் நபர்கள் மட்டுமே, அண்ணா மலை மீது ஏற அனுமதி வழங்கப்படும். 11 நாட்களுக்கும் மலை மீது ஏற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in