மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் மதுரை மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் 8 பேருக்கு வாய்ப்பு

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் மதுரை மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் 8 பேருக்கு வாய்ப்பு
Updated on
1 min read

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின்படி அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் கலந்தாய்வில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் 8 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

முதல் நாள் நடந்த கலந்தாய்வில், மதுரை மாவட்டம் எம்.புளியங்குளம் அரசுப்பள்ளி மாணவர் எஸ்.கணேஷ்குமார், தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

எம்.சுப்பலாபுரம் அரசுப்பள்ளி மாணவர் கார்த்திக் ராஜாவுக்கு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியிலும், மதுரை மகபூப்பாளையம் அரசுப் பெண்கள் பள்ளி மாணவி சீதாலட்சுமிக்கு தேனி மருத்துவக் கல்லூரியிலும்; மதுரை மாநகராட்சி நாவலர் சோமசுந்தர பாரதியார் பெண்கள் பள்ளி

மாணவி பவித்ராவுக்கு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியிலும்; அலங்காநல்லூர் அரசுப் பெண்கள் பள்ளி மாணவி தீபிகாவுக்கு, சிதம்பரம் ராஜா அண்ணாமலை மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.

இன்று நடந்த இரண்டாம் நாள் கலந்தாய்வில் எழுமலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கார்த்திகாவுக்கு சிதம்பரம் ராஜா அண்ணாமலை மருத்துவக் கல்லூரியிலும்; செக்கானூரணி அரசுப்பள்ளி மாணவர் பிரதாபுக்கு, திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியிலும்; மதுரை கஸ்தூரிபாய் காந்தி மாநகராட்சிப் பெண்கள் பள்ளி மாணவி காவியா, கன்னியாகுமரி மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளதாக மதுரை மாவட்ட கல்வித்துறை நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in