

திண்டுக்கல்லில் நாளை முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை புத்தகத் திருவிழா நடக்கிறது.
மதுரை மீனாட்சி புத்தக நிலையம் சார்பில் திண்டுக்கல் திருவள்ளுவர் சாலையில் உள்ள பழைய தேனா வங்கி கட்டிடத்தில், புத்தகக் காட்சி நடைபெறுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கும் இந்தப் புத்தகத் திருவிழா டிசம்பர் 6-ம் தேதி வரையில் நடைபெறும். தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரையில் விற்பனை நடைபெறும்.
'இந்து தமிழ் திசை' உள்பட அனைத்துப் பதிப்பகங்களின் முக்கியமான நூல்களும் இந்தப் புத்தகக் காட்சியில் கிடைக்கும். அனைத்து நூல்களுக்கும் 10 சதவீதத் தள்ளுபடி உண்டு.
மேலும் விவரங்களுக்கு 94432 62763 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது