

அதிமுக மாநில நிர்வாகிகள், சட்டப்பேரவை தேர்தல் பொறுப் பாளர்கள் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியிடப்பட உள்ளது.
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர் தலுக்கு, திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளை முந்திக்கொண்டு, பல மாதங்களுக்கு முன்பே அடிப்படை பணிகளை அதிமுக தொடங்கிவிட்டது. ஆர்.கே.நகரில் நடந்த இடைத் தேர்தலை சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான முன்னோட் டமாகவும் அதிமுக கருதுகிறது.
ஆர்.கே.நகர் தேர்தல் முடிந்து முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற சில மாதங்களில், தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பொறுப் பாளர்களை நியமிக்குமாறு கூறினார். இதன்படி, 64 ஆயிரத் துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு பொறுப்பாளர் களை மாவட்ட நிர்வாகிகள் நியமித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அதிமுகவில் உட்கட்சி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஒன்றிய, நகர, மாநகர, மாவட்ட நிர்வாகிகள் பெயர் பட்டியலை கட்சித் தலைமை சமீபத்தில் வெளியிட்டது. கட்சிரீதியான 50 மாவட்டங்களுக்கும் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர். ஆனால், மாநில நிர்வாகிகள் இன்னும் அறிவிக் கப்படவில்லை. தேர்தல் பொறுப்பாளர்களும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இதற்கிடையில், திமுகவின் 32 மாவட்டங்களுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நேற்று நியமிக்கப்பட்டனர். அதிமுகவும் தேர்தல் பொறுப்பாளர்களை விரைவில் நியமிக்க உள்ளது. இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:
திமுகவுக்கு முன்னரே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டோம். கட்சித் தலைமை உத்தரவுப்படி 64,094 வாக்குச்சாவடிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் வாக்காளர் பட்டியல் விவரங்களை சரிபார்த்து வருகின் றனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள், தகுதியான வயதை அடைந்த வர்களைக் கண்டறிந்து அவர்களின் பெயரை சேர்க்கும் பணியும் நடக்கிறது.
இதுதவிர, அரசின் 4 ஆண்டு சாதனைகள் தொடர்பான கையேடு, நோட்டீஸ் கொடுப்ப துடன், விளக்கப் படங்களையும் திரையிட்டு வருகிறோம். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதியில் பொது மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று அவற்றின் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கட்சியின் மாவட்ட செயலாளர் கள், பிற மாநிலங்களுக்கான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு அவர்களும் தங்கள் பணிகளை தொடங்கிவிட்டனர். ஆனால், அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட மாநில அளவிலான நிர்வாகிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள சூழலில், தகுதியான நிர்வாகி களை ஜெயலலிதா விரைவில் அறிவிப்பார். மாநில நிர்வாகிகள், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் கள் குறித்த அறிவிப்பு 27-ம் தேதி வெளியாகும்.
இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.