மதுரை மாநகர் திமுக இரண்டாகப் பிரிப்பு; பொறுப்பாளர்களை நியமித்து துரைமுருகன் அறிவிப்பு

துரைமுருகன்: கோப்புப்படம்
துரைமுருகன்: கோப்புப்படம்
Updated on
1 min read

மதுரை மாநகர் மாவட்ட திமுக, மதுரை மாநகர் வடக்கு - மதுரை மாநகர் தெற்கு ஆகிய இரு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும், அம்மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்களையும் நியமித்து, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சிப் பணிகள் வேகமெடுக்கவும், தொய்வின்றி நடக்கவும் திமுகவின் மாவட்ட அமைப்புகள் பிரிக்கப்பட்டு வருகின்றன. 2 முதல் 4 சட்டப்பேரவை இடங்களுக்கு ஒரு பொறுப்பாளர் என நியமிக்கப்படுகின்றனர்.

திருவள்ளூர், வடசென்னை, மேற்கு சென்னை, தஞ்சை மாவட்ட திமுக பிரிக்கப்பட்டு, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் இன்று மதுரை மாநகர் மாவட்ட திமுக இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று (நவ. 19) வெளியிட்ட அறிவிப்பு:

"மதுரை மாநகர் மாவட்டம், கட்சி நிர்வாக வசதிக்காகவும், கட்சிப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், மதுரை மாநகர் வடக்கு - மதுரை மாநகர் தெற்கு என இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது.

மதுரை மாநகர் வடக்கு மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்

மதுரை வடக்கு

மதுரை தெற்கு

மதுரை மாநகர் தெற்கு மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்

மதுரை மத்தியம்

மதுரை மேற்கு

மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

கட்சி நிர்வாக வசதிக்காகவும், கட்சிப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும் புதியதாக அமையப் பெற்ற மதுரை மாநகர் வடக்கு - மதுரை மாநகர் தெற்கு ஆகிய மாவட்டங்களுக்குப் பின்வருமாறு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

மதுரை மாநகர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் - பொன்.முத்துராமலிங்கம்

மதுரை மாநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் - கோ.தளபதி".

இவ்வாறு துரைமுருகன் அறிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in