

தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இன்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக கடனாநதி அணையில் 45 மி.மீ. மழை பதிவானது.
குண்டாறு அணையில் 43 மி.மீ., சங்கரன்கோவிலில் 36 மி.மீ., செங்கோட்டையில் 31 மி.மீ., சிவகிரியில் 26 மி.மீ., ராமநதி அணையில் 15 மி.மீ., கருப்பாநதி அணை, அடவிநயினார் அணையில் தலா 13 மி.மீ., ஆய்க்குடியில் 10.60 மி.மீ., தென்காசியில் 8.60 மி.மீ. மழை பதிவானது.
தொடர் மழையால் கடனாநதி அணை, கருப்பாநதி அணை, குண்டாறு அணைகள் ஏற்கெனவே நிரம்பிவிட்டன. இந்நிலையில், 84 அடி உயரம் உள்ள ராமநதி அணையும் நிரம்பியது.
பாதுகாப்பு கருதி ராமநதி அணை நீர்மட்டம் 82 அடியில் நிலை நிறுத்தப்பட்டு, உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. 132.22 அடி உயரம் உள்ள அடவிநயினார் அணை நீர்மட்டம் 104 அடியாக இருந்தது. இந்த அணைக்கு விநாடிக்கு 92 கனஅடி நீர் வந்தது. 30 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.