

ஆவின் நிறுவனத்தில் தேங்கி யுள்ள பால் பவுடரை சத்துணவுக் கூடங்களுக்கு வழங்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி யுள்ளார்.
தமாகா கட்சியின் திருப்பூர் மாநகர், மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஜி.கே.வாசன் நேற்று திருப்பூர் வந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
வரும் 26 முதல் 28-ம் தேதி வரை கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் ‘மக்களை நோக்கி - மக்கள் தளபதி’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.
ஐரோப்பிய நாடுகளுடனான தடையில்லா வர்த்தக ஒப்பந் தத்தை, மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இதனால், திருப்பூரில் ஏற்றுமதி மட்டுமின்றி வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.
ஆவின் பால் பண்ணைகளை நவீனப்படுத்துவதோடு, தேங்கியுள்ள 12 ஆயிரம் டன் பால் பவுடரை சத்துணவுக் கூடங்களுக்கு வழங்க ஆவன செய்ய வேண்டும் என்றார்.