செக்கு எண்ணெய் மூலம் வஉசி ஓவியம் வரைந்த மாணவி

திருநெல்வேலியில் வ.உ.சிதம்பரனார் உருவத்தை செக்கு எண்ணெய்யில் ஓவியமாக வரைந்த மாணவி இரா.தீக்ஷனா.
திருநெல்வேலியில் வ.உ.சிதம்பரனார் உருவத்தை செக்கு எண்ணெய்யில் ஓவியமாக வரைந்த மாணவி இரா.தீக்ஷனா.
Updated on
1 min read

வ.உ.சி.யின் நினைவு நாளை முன்னிட்டு திருநெல்வேலி சிவராம் கலைக்கூட மாணவியும், பாளையங்கோட்டை புனித இக்னேஷியஸ் கான்வென்ட் 6-ம் வகுப்பு மாணவியுமான இரா. தீக்ஷனா, வ.உ.சி. உருவப்படத்தை செக்கில் ஆட்டி எடுக்கப்பட்ட எண்ணெய்யில் கருப்பு வெள்ளை ஓவியமாக 100 சதுர அடியில் வரைந்து ஆச்சரியப்படுத்தினார்.

திருநெல்வேலி சந்திப்பு மதிதா இந்து மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்த ஓவியம் வரையும் நிகழ்வு நடைபெற்றது. ஓவியத்தை ஒருமணி நேரத்தில் மாணவி வரைந்து சாதனை படைத்துள்ளார்.

மாணவியை மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி பிரிவு மாநகர காவல் உதவி ஆணையர் எஸ்.சேகர், ம.தி.தா பள்ளி தலைமை ஆசிரியர் உலகநாதன், கல்விச் சங்க மேலாளர் சட்டநாதன், வ.உ.சி இலக்கிய மாமன்ற செயலாளர் கோ.கணபதி சுப்பிரமணியன், சிவராம் கலைக்கூட தலைமை பயிற்சியாளர் சிவராமகிருஷ்ணன், கலைக்கூட நிறுவனர் கணேசன் மற்றும் பலர் பாராட்டினர். மாணவியின் பெற்றோர் ராஜசேகர், ஜனனி உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in