

தற்கொலை எண்ணத்தை தவிர்க்க மாணவர்களின் மன ஆரோக்கியம் குறித்த பாடத்தை கூடுதல் பாடத்திட்டமாக சேர்க்க வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் லடாக் வரையில் நடைபயணம் மேற்கொண்டுள்ள ஜார்கண்ட் மாநில இளைஞர் ரோனிட் (23) என்பவருக்கு வள்ளியூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வள்ளியூர் பஸ் நிலைய வியாபாரிகள் சங்கத் தலைவர் பசுமதி மணி தலைமையில் அளிக்கப்பட்ட வரவேற்பில், செயலாளர் சீராக் இசக்கியப்பன், வணிகர்நலச்சங்க துணைச் செயலாளர் ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ரோனிட் கூறும்போது, “10-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் வழியாக நடைபயணம் செல்கிறேன். வழியெங்கும் மாணவர்களின் மன ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கிறேன். மாணவர்கள், பொதுமக்களிடம் கோரிக்கை மனுவில் கையெழுத்து பெற்று, பல லட்சம் கையெழுத்துடன் கூடிய மனுவை மத்திய கல்வி அமைச்சரிடம் வழங்க இருக்கிறேன்” என்றார்.