சென்னை, தஞ்சை மாவட்ட திமுக பிரிப்பு: பொறுப்பாளர்களை அறிவித்தார் துரைமுருகன்

சென்னை, தஞ்சை மாவட்ட திமுக பிரிப்பு: பொறுப்பாளர்களை அறிவித்தார் துரைமுருகன்
Updated on
1 min read

திமுகவின் நிர்வாக வசதிக்காகவும், கட்சிப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், சென்னை வடக்கு, சென்னை மேற்கு, தஞ்சை மாவட்ட திமுக பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கான மாவட்டப் பொறுப்பாளர்களையும் நியமித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சிப் பணிகள் வேகமெடுக்கவும், தொய்வின்றி நடக்கவும் திமுகவின் மாவட்ட அமைப்புகள் பிரிக்கப்பட்டு வருகின்றன. 2 முதல் 4 சட்டப்பேரவை இடங்களுக்கு ஒரு பொறுப்பாளர் என நியமிக்கப்படுகின்றனர்.

சமீபத்தில் திருவள்ளூர் மாவட்ட திமுக பிரிக்கப்பட்ட நிலையில், வடசென்னை, மேற்கு சென்னை, தஞ்சை மாவட்ட திமுக பிரிக்கப்பட்டு, பொறுப்பாளர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

''சென்னை வடக்கு மாவட்ட திமுக நிர்வாக வசதிக்காகவும், கட்சிப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், சென்னை வடக்கு - சென்னை வடகிழக்கு என 2 மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது.

சென்னை வடகிழக்கு மாவட்டத்தில் அடங்கியுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்

1. மாதவரம்
2. திருவொற்றியூர்

சென்னை வடகிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மாதவரம் எஸ். சுதர்சனம்.

சென்னை வடக்கு மாவட்டத்தில் அடங்கியுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்

1. ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்)
2. பெரம்பூர்
3. ராயபுரம்

சென்னை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தா.இளைய அருணா.

சென்னை மேற்கு மாவட்டம் சென்னை மேற்கு - சென்னை தென்மேற்கு என இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது.

சென்னை தென்மேற்கு மாவட்டத்தில் அடங்கியுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்

1. தி.நகர்
2. மயிலாப்பூர்

சென்னை தென்மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் மயிலை. த.வேலு.

சென்னை மேற்கு மாவட்டத்தில் அடங்கியுள்ள சட்டப்பேரவை தொகுதிகள்

1. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி
2. ஆயிரம் விளக்கு
3. அண்ணாநகர்

சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் சிற்றரசு

தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு மாவட்ட திமுக, தஞ்சை வடக்கு மாவட்டம், தஞ்சை மத்திய மாவட்டம், தஞ்சை தெற்கு மாவட்டம் என 3 மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது.

* தஞ்சை வடக்கு மாவட்டத்தில் அடங்கியுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்

1. திருவிடைமருதூர் (தனி)
2. கும்பகோணம்
3. பாபநாசம்

தஞ்சை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் க.கல்யாணசுந்தரம்

* தஞ்சை மத்திய மாவட்டத்தில் அடங்கியுள்ள சட்டப்பேரவை தொகுதிகள்

1. திருவையாறு
2. ஒரத்தநாடு
3. தஞ்சாவூர்

தஞ்சை மத்திய மாவட்டப் பொறுப்பாளர் துரை.சந்திரசேகரன்

* தஞ்சை தெற்கு மாவட்டத்தில் அடங்கியுள்ள சட்டப்பேரவை தொகுதிகள்

1. பட்டுக்கோட்டை
2. பேராவூரணி

தஞ்சை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் ஏனாதி.ப.பாலசுப்ரமணியம்''

இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in