

கொட்டிவாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் நடிகை கவுதமி வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை இவரது வீட்டு வளாக சுற்றுச்சுவர் ஏறி இளைஞர் ஒருவர் குதித்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் அங்கு வந்த நீலாங்கரை போலீஸார் இளைஞரைப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். மதுபோதையில் இருந்த அவரிடம் நடத்தப்பட்டவிசாரணையில், கொட்டிவாக்கம், குப்பத்தைச் சேர்ந்த பெயின்டர் பாண்டியன் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது 2 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து பின்னர், ஜாமீனில் விடுவித்தனர்.