சென்னையில் இருந்து வெளியூருக்கு 300 சிறப்பு பேருந்துகள்: 4 நாள் விடுமுறை எதிரொலி

சென்னையில் இருந்து வெளியூருக்கு 300 சிறப்பு பேருந்துகள்: 4 நாள் விடுமுறை எதிரொலி
Updated on
1 min read

தொடர்ந்து 4 நாட்களுக்கு அரசு விடுமுறை வருவதால், சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். பயணிகளின் வசதிக்காக சென் னையில் இருந்து வெளியூர் களுக்கு 300 சிறப்பு பேருந்து கள் இயக்கப்பட உள்ளன.

நாளை (21-ம் தேதி) ஆயுத பூஜை, 22-ம் தேதி விஜயதசமி, 24-ம் தேதி மொகரம் மறுநாள் ஞாயிறு என 4 நாட்கள் அரசு விடு முறை வருகிறது. இடையில் வெள்ளிக்கிழமை ஒருநாள் விடுமுறை எடுத்தால் தொடர்ந்து 5 நாட்களுக்கு விடுமுறை கிடைத்துவிடும். சென்னையில் வசிக்கும் பலர், இந்த தொடர் விடுமுறையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இதனால், ரயில் முன்பதிவு மையங்களில் நேற்று காலை கூட்டம் அலைமோதியது. ரயில்களில் தத்கல் முன்பதிவு தொடங்கிய 3 நிமிடங்களில் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன. இதேபோல, ஆம்னி பேருந்து களிலும் டிக்கெட் முன்பதிவு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.

கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற் காக, சிலர் நேற்றே சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்ற னர். இதனால் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் இயக் கப்படும் விரைவு ரயில் களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் மற்றும் ஆம்னி பேருந்து நிலையங்களிலும் நேற்று மாலை கூட்டம் அதிக மாக காணப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in