வேலூர் கோட்டை காவலர் பயிற்சி பள்ளியில் 32 ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சி பெற்ற காவலர்கள் சந்திப்பு

வேலூர் கோட்டையில் உள்ள காவல் பயிற்சி பள்ளியில் கடந்த 1988-ம் ஆண்டு பயிற்சி பெற்ற காவலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், கோட்டையில் உள்ள திப்பு மஹால் முன்பாக அனைவரும் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். படம்:வி.எம்.மணிநாதன்.
வேலூர் கோட்டையில் உள்ள காவல் பயிற்சி பள்ளியில் கடந்த 1988-ம் ஆண்டு பயிற்சி பெற்ற காவலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், கோட்டையில் உள்ள திப்பு மஹால் முன்பாக அனைவரும் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். படம்:வி.எம்.மணிநாதன்.
Updated on
1 min read

வேலூர் கோட்டையில் 32 ஆண்டு களுக்கு முன்பு பயிற்சி பெற்ற காவலர் களின் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

வேலூர் கோட்டை வளாகத்தில் காவலர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, கடந்த 1988-ம் ஆண்டு 120 பேர் காவலர் பயிற்சி பெற்றனர். அவர்கள், தற்போது தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் உதவி காவல் ஆய் வாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் ‘வாட்ஸ் -அப்’ குழு ஒன்றை தொடங்கி, அதன் மூலம் 120 பேர் இணைந்து தங்களது நினைவுகளையும், வாழ்க்கை தரத்தையும் அவ்வப்போது பகிர்ந்து வந்தனர்.

நவம்பர் 17-ம் தேதி நேற்றுடன் அவர்கள் பயிற்சி பெற்று 32 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அவர்கள் அனைவரும் வேலூர் கோட்டைக்கு நேற்று காலை வந்தனர்.கோட்டையின் உள்ளே அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து, கோட்டை வளாகத்தில் அவர்கள் பயிற்சி பெற்ற மைதானத்தை பார்வையிட்டு பழைய நினைவுகளை நினைவுக் கூர்ந்தனர். அப்போது, ஒருவருக்கொருவர் தாங்கள் பயிற்சிப்பெற்றபோது ஏற்பட்ட பழைய நினைவுகளை நினைவுக் கூர்ந்து நெகிழ்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து, அங்குள்ள திப்பு மஹால், ஹைதர் மஹால் ஆகியவற்றை பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து, அவர் களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 32 ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சி அளித்த ஓய்வு பெற்ற எஸ்பி தட்சிணாமூர்த்தி, துணை காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் சிறப்பு விருந் தினராக கலந்து கொண்டு, உதவி காவல் ஆய்வாளர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in