

தொடர் மழை காரணமாக விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகர் ரயில்வே மேம்பாலத்தின் பக்கவாட்டுச் சுவர் சரிந்து விழுந்து சேதமடைந்தது.
தொடர் கனமழை காரணமாக மதுரையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர்- சாத்தூர் இடையே உள்ள ஆர்.ஆர் நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் உள்ளது.
சுமார் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கடந்த 2008ம் ஆண்டு இன்டர்லாக் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட இந்த பாலத்தின் பக்கவாட்டு சுவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் மழையால் இடிந்து சரிந்து விழுந்தன.
தற்போது தொடர் மழை காரணமாக பாலத்தின் அதே பகுதி மீண்டும் இடிந்து சரிந்து விழுந்தது. இடிந்துள்ளது. பாலத்தின் பக்கவாட்டில் இருந்த அணுகு சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
பக்கவாட்டுச் சுவர் இடிந்துள்ளாதால் பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளதால் பாலத்தில் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.