Last Updated : 17 Nov, 2020 06:26 PM

 

Published : 17 Nov 2020 06:26 PM
Last Updated : 17 Nov 2020 06:26 PM

தென்காசியில் தொடர் மழை: கருப்பாநதி அணையில் 55 மி.மீ. மழைப்பதிவு

தென்காசி

தென்காசி மாவட்டம் கருப்பாநதி அணையில் 55 மி.மீ. மழைப்பதிவாகியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் நேற்று பரவலாக பலத்த மழை பெய்தது. இன்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக கருப்பாநதி அணையில் 55 மி.மீ. மழை பதிவானது. சங்கரன்கோவிலில் 53 மி.மீ., சிவகிரியில் 51 மி.மீ., அடவிநயினார் அணையில் 48 மி.மீ., தென்காசியில் 44 மி.மீ., ராமநதி அணையில் 40 மி.மீ., ஆய்க்குடியில் 29 மி.மீ., கடனாநதி அணையில் 26 மி.மீ., குண்டாறு அணையில் 21 மி.மீ., செங்கோட்டையில் 18 மி.மீ. மழை பதிவானது.

இன்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பகலில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது.

கடனாநதி அணை நீர்மட்டம் நான்கரை அடி உயர்ந்து 76.50 அடியாக இருந்தது. இந்த அணைக்கு விநாடிக்கு 564 கனஅடி நீர் வந்தது. 70 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

ராமநதி அணை நீர்மட்டம் மூன்றரை அடி உயர்ந்து 69.50 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 145 கனஅடி நீர் வந்தது. 70 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

கருப்பாநதி அணை நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 62.01 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 172 கனஅடி நீர் வந்தது. 10 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. 36.10 அடி உயரம் உள்ள குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது.

அடவிநயினார் அணை நீர்மட்டம் ஒன்றரை அடி உயர்ந்து 97 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 30 கனஅடி நீர் வந்தது. 48 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x