

ராமநாதபுரம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் வீடு இடிந்து மூதாட்டி ஒருவர் பலியானார்.
ராமநாதபுரம் நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான பாரதிநகர் வெளிப்பட்டினம் சூரங்கோட்டை கருங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நான்கைந்து நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் ராமநாதபுரத்தை அடுத்த கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சோலையம்மாள் என்ற 70 வயது மூதாட்டி இன்று காலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது வீடு இடிந்து விழுந்து பரிதாபமாக பலியானார். நல்வாய்ப்பாக அந்த வீட்டில் இருந்த மேலும் 2 பேர் வெளியில் வந்ததால் அவர்கள் உயிர் தப்பினர்.
இச்சம்பவம் குறித்து பி1 போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.