

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் ஊனையூர் அருகே உள்ள ஆலமரத்துக் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அருண்பாண்டி(28). இவர், நேற்று முன்தினம் இரவு சவேரியார்புரத்தில் இருந்து திருமயத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார்.
கொசப்பட்டி கண்மாய் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, இவரது மோட்டார் சைக்கிள் மீது, எதிரே மக்கள் நீதி மய்யம் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் கவிஞர் சினேகன் ஓட்டிச் சென்ற கார் மோதியது. இதில், அருண்பாண்டி காயமடைந்தார். திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து திருமயம் போலீஸார், 2 பிரிவுகளின் கீழ் சினேகன் மீது நேற்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.