அதிரடி அரசியல் செய்ய பாஜக தயார் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கருத்து

அதிரடி அரசியல் செய்ய பாஜக தயார் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கருத்து
Updated on
1 min read

அதிரடி அரசியல் செய்ய பாஜகவும் தயாராக உள்ளது என அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

வாக்குக்காக அரசியல் செய்பவர்கள் நாங்கள் அல்ல. அரவக்குறிச்சி தொகுதியில் வேட்பாளராக நிற்பவர்கள் தொகுதியை பகடைக்காயாக பயன்படுத்திக் கொள்கின்றனர். ஒரு முறை களம் கண்டு அடுத்த தேர்தலுக்கு வேறு தொகுதிக்கு சென்றுவிடுகின்றனர். எனவேதான் இத்தொகுதி இன்னமும் பின்தங்கிய பகுதியாகவே இருக்கிறது.

தற்போது பாஜக மாநில நிர்வாகிகள் அனைவரும் தங்களது சொத்து விவரங்களை போஸ்டர் அடித்து ஒட்ட தயார். இதேபோல அரவக்குறிச்சி தொகுதியில் வேட்பாளராக நிற்க உள்ள கட்சி நிர்வாகிகள் சொத்து விவரங்களை பகிரங்கமாக போஸ்டர் அடித்து ஒட்ட தயாரா? இனி பாஜக அதிரடி அரசியல் செய்ய தயாராக உள்ளது.

ஒரு கட்சி தங்களது சாதனைகளை குறிப்பிட்டு சுவர் விளம்பரம் செய்யாமல், கோழைத்தனமாக ‘கோ பேக்’ மோடி என எழுதியுள்ளது. அதை அந்தக் கட்சி அழிக்கவேண்டும். இதற்கு ஒரு வாரம் அவகாசம் அளிக்கிறோம். அதன்பிறகும் அவர்கள் அதை அழிக்காவிட்டால், அவர்களது சுவர் விளம்பரங்களில் மை வைத்து அழிக்கப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in