Published : 08 Oct 2015 07:41 AM
Last Updated : 08 Oct 2015 07:41 AM

வயிற்றெரிச்சலால் ஸ்டாலினை திட்டுகின்றனர்: கருணாநிதி குற்றச்சாட்டு

காழ்ப்புணர்வு மற்றும் வயிற்றெரிச்சலால் மற்ற கட்சியினர் ஸ்டாலினை திட்டுகின்றனர் என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

விளைச்சல் குறைவு, ஆன்லைன் வர்த்தகம் ஆகியவற் றால் துவரம் பருப்பு கிலோ ரூ.180, உளுத்தம் பருப்பு ரூ.170 ஆக உயர்ந்துள்ளது. பாமாயில் ரூ.53, பூண்டு விலை கிலோவுக்கு ரூ.40 வரையும் உயர்ந்துள்ளது. ரேஷனி லும் கடந்த பல மாதங்களாக பருப்பு விநியோகம் முறையாக இல்லை. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டிய தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

செப்டம்பர் 29-ம் தேதி தலை மைச் செயலகத்தில் நடந்த விழா வில் சிங்காரவேலர், ஜீவரத்தினம் மணிமண்டபங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்துள் ளார். ஆனால், இந்தச் செய்தி அக்டோபர் 4-ம் தேதிதான் ஊடகங் களில் வந்துள்ளது. முதல்வரின் காணொலி காட்சி நிகழ்ச்சிகளுக்கு அரசின் புகைப்படக்காரர் தவிர மற்றவர்களை அனுமதிப்பதில் லையா? இதற்கு அரசின் நேரடி யான பதில் என்ன?

‘நமக்கு நாமே’ பயணம் மேற் கொண்டுள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை அதிமுகவைவிட மற்ற கட்சியினர் அதிகமாக விமர் சித்து வருகின்றனர். காழ்ப்புணர்வு, வயிற்றெரிச்சலால் திட்டுகின்றனர். அவர்களை நினைத்துதான் அண்ணா அன்றே ‘வாழ்க வசவாளர்கள்’ என்றார். அவர்கள் வசை பாடுவதிலிருந்தே ஸ்டாலின் பயணத்துக்கு மக்களிடம் வர வேற்பு பெருகி வருவது தெரிகிறது.

டிஎஸ்பி விஷ்ணுபிரியா கொலை வழக்கில் பல்வேறு குழப்பங்கள் நடந்து வருகின்றன. அவர் தலித் என்பதால் அவ மானப்படுத்தப்பட்டதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. விஷ்ணு பிரியா விசாரித்து வந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்படும் யுவராஜ் என்பவர் அன்றாடம் ஊடகங்களில் பேசி வருகிறார். ஆனால், அவரை காவல் துறையினரால் பிடிக்க முடியவில்லை.

திராவிட இயக்கங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் விமர்சனம் செய்துள்ளார். இதற்கு திராவிடர் கழக நிர்வாகி கலி.பூங்குன்றன், திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு ஆகியோர் ஆதாரங்களுடன் விளக்கம் அளித்துள்ளனர். திமுகவினர் இந்த விவரங்களை எல்லாம் படித்து மற்றவர்களுக்கு விளக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x