Published : 12 Oct 2015 08:41 PM
Last Updated : 12 Oct 2015 08:41 PM

தமிழகத்தில் 440 புதிய பேருந்துகள்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் ரூ.100 கோடியே 18 லட்சம் மதிப்பிலான 440 புதிய பேருந்துகளை முதல்வர் ஜெயலலிதா இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 422 புதிய பேருந்துகள், 18 புதிய சிற்றுந்துகளுடன், 27 புதிய வழித்தடங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

இதில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 23 வழித்தடங்களில் மகளிர் மற்றும் சிறுவர்களுக்கான 50 பஸ் சேவையும் அடங்கும். 18 சிற்றுந்துகளும் கோவை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மலைப்பகுதிகளில் இயக்கப்படுகின்றன.

பெண்களுக்கு 50 பேருந்துகள்

திருவொற்றியூர்- எழும்பூர் ரயில் நிலையம், அய்யப்பன் தாங்கல்- திருவான்மியூர், செங்குன்றம்- வி.நகர், பூந்தமல்லி, பூந்தமல்லி- தாம்பரம், திருவான்மியூர்- தாம்பரம், தாம்பரம் கிழக்கு, பெரம்பூர்- விநாயகபுரம், பிராட்வே- அய்யப்பன் தாங்கல் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும், கோயம்பேடு, வடபழனி, தாம்பரம், மணலி, கொரட்டூர், ஜெ.ஜெ.நகர் பகுதிகளிலிருந்து பிராட்வே, அண்ணாநகர் மேற்கு- வி.இல்லம், தி.நகர்- திருவேற்காடு, பட்டினப்பாக்கம் - சுங்கச்சாவடி, எண்ணூர்- உயர் நீதிமன்றம், தி.நகர்- கூடுவாஞ்சேரி, திருவான்மியூர்- கோயம்பேடு, குன்றத்தூர் - வடபழனி என 23 வழித்தடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான 50 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.













FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x