

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலையில் இருந்து 3 மணி நேரமாக இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் கரைபுரண்டோடிய மழைநீரில் வாகனங்கள் தத்தளித்தவாறு சென்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் கன்னியாகுமரி கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் இன்று அதிகாலையில் இருந்து சாரலுடன் மிதமாத மழை பெய்தது.
பின்னர் காலை 8.30 மணியளவில் மழையின் வேகம் அதிகரித்தது. இடி, மின்னலுடன் பலத்த கனமழை பெய்தது. தொடர்ச்சியாக 3 மணி நேரத்திற்கு மேல் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் ஆறு போன்று பெருக்கெடுத்து ஓடியது.
நாகர்கோவில், கன்னியாகுமரி, சுசீந்திரம், ஆரல்வாய்மொழி, தக்கலை, திங்கள்நகர், குளச்சல், மார்த்தாண்டம், களியக்காவிளை, குலசேகரம், கருங்கல் என மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நாகர்கோவில், மார்த்தாண்டம் பகுதியில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பாதியளவு மூழ்கியவாறு தத்தளித்த நிலையில் ஊர்ந்து சென்றன.
மழையால் ரப்பர் பால் வெட்டும் தொழில், தென்னை தொடர்பான தொழில்கள், உப்பளம், மீன்பிடி தொழில், செங்கல்சூளை, கட்டிட தொழில் என அனைத்து தரப்பு தொழில்களும் பாதிப்படைந்தன.
ஏற்கெனவே முந்தைய தினம் பெய்த மழையில் அதிகபட்சமாக கொட்டாரத்தில் 29 மிமீ மழை பெய்திருந்தது. தற்போது பெய்த கனமழையால்