Published : 18 Oct 2015 10:07 AM
Last Updated : 18 Oct 2015 10:07 AM

சுமுக உறவு இல்லாததால் காவிரி நீர் பெறுவதில் சிக்கல்: முதல்வர் ஜெயலலிதா மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

முதல்வர் ஜெயலலிதாவுக்கு அண்டை மாநிலங்களுடன் சுமுக உறவில்லாததால் தான் காவிரியில் நீரைப் பெற முடியவில்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் நேற்று நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் அவர் வழிபட்டார். தொடர்ந்து, கோவில் பத்து கிராமத்தில் விவசாயிகள், உப்பள உரிமையாளர்கள், தொழிலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த ஸ்டாலின், “காவிரிப் பிரச்சினையைத் தீர்க்க முதல்வர் ஜெயலலிதா ஒருமுறைகூட டெல்லிக்கோ, கர்நாடகத்துக்கோ சென்ற தில்லை. அவருக்கு அண்டை மாநிலங்களு டன் சுமுக உறவு இல்லாததால்தான் காவிரியில் நீரைப் பெற முடியவில்லை. விவசாயிகள், உப்பளத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு, திமுக ஆட்சி அமைந்த வுடன் தீர்வு காணப்படும்” என்றார்.

வேளாங்கண்ணியில் வேலையில்லா பட்டதாரிகளுடன் பேசிய ஸ்டாலின், “திமுக ஆட்சிக்கு வந்தால், அதிமுகவின் திட்டங்கள் கிடப்பில் போடாமல், மெருகேற்றப்பட்டு செயல்படுத்தப்படும். வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வேலை அளிக்கும் நிறுவனங்களாக மாற்றப்படும். தமிழகமெங்கும் தொழில்நுட்ப நிறுவனங் கள் அமைக்கப்படும். அப்துல் கலாம் கனவை நிறைவேற்றும் வகையில், வேலைவாய்ப்புத் துறைக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என்றார்.

தொடர்ந்து, நாகை துறைமுகம் சென்ற ஸ்டாலின், விசைப்படகில் பயணம் செய்தார். அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப் பம் மீனவக் கிராமங்களில் சுனாமியால் இறந்தவர்களின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார். மாலையில் பூம்புகார், மயிலாடுதுறை, சீர்காழியில் பொதுமக்களை சந்தித்துப் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x