

விக்கிரவாண்டியை அடுத்ததொரவி கிராமத்தைச் சேர்ந்த வர் கந்தசாமி (50). இவரது வீட் டிற்கு எதிர்வீட்டில் வசிப்பவர் அங்கப்பன் (45). தீபாவளிப் பண்டி கையை ஒட்டி, நேற்று முன்தினம் இரவு பட்டாசு வெடிப்பதில், கந்தசாமி மற்றும் அங்கப்பன் தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அங்கப்பன் தரப்பைச் சேர்ந்த கமலக்கண்ணன்(40) என்பவருக்கு அரிவாள் வெட்டும், கந்தசாமி தரப்பில் வினோத்(30), ராஜாங்கம்(45) மற்றும் கந்தசாமி ஆகியோர் காயமடைந்தனர்.காயமடைந்த 4 பேரும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டனர்.
இதுகுறித்து புகார் அளிக்க அங்கப்பன் தரப்பில், தொரவி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சங்கர் என்பவருடன் விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு நேற்று சென்றனர். அப்போது, சங்கரை போலீஸார் காவல்நிலையத்தில் அமர வைத்துள் ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொரவி கிராம மக்கள், விழுப் புரம்-வழுதாவூர் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் சங்கரை விடுவித்தனர். பின்னர் விழுப்புரம் டிஎஸ்பி நல்லசிவம் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தியதால் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
விழுப்புரம் எஸ்பி ராதாகி ருஷ்ணன், விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின்பேரில் 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்த விக்கிரவாண்டி போலீஸார், அங்கப்பன், குமார் என்கிற சதீஷ், ஜெகன், ராஜா, மகாதேவி மற்றும் ராஜாங்கம் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.