

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கான 2-வது கட்ட கலந்தாய்வு அக்டோபர் 14-ம் தேதி தொடங்குகிறது.
14-ம் தேதி காலை 9 மணிக்கு மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண் கணித பட்டதாரிகளுக்கும், மதியம் 1 மணிக்கு ஆண் கணித பட்டதாரிகளுக்கும் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
15-ம் தேதி காலை 9 மணிக்கு இயற்பியல் பட்டதாரிகளுக்கும், 10 மணிக்கு தாவரவியல் பட்டதாரிகளுக்கும், மதியம் 1 மணிக்கு வேதியியல் பட்டதாரிகளுக்கும், 2 மணிக்கு விலங்கியல் பட்டதாரிகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.
கடைசி நாளான 16-ம் தேதி காலை 9 மணிக்கு தமிழ், ஆங்கிலம், புவியியல் பாடங்களுக்கும், மதியம் 1 மணிக்கு வரலாறு, பொருளாதாரம், வணிகவியல், கணினி அறிவியல், மனையியல் பாடங்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை பாரதி அறிவித்துள்ளார்.