

தீபாவளி பண்டிகையையொட்டி கடை வீதிகள் களைகட்டின. துணிக் கடை கள், பட்டாசு கடைகளில் கடைசிநேர விற்பனை சூடுபிடித்தது. மக்கள் ஆர்வத்துடன் பொருட்களை வாங்கிச் சென்றனர்.
தமிழகம் முழுவதும் தீபாவளி பண் டிகை இன்று உற்சாகத்துடன் கொண் டாடப்படுகிறது. பல பகுதிகளில் சிறு வர்கள் நேற்று காலை முதலே பட்டாசுகளை வெடித்து தீபாவளியை வரவேற்றனர். தீபாவளி கடைசிநேர விற்பனையும் விறுவிறுப்பாக நடந்தது. மாநிலத்தின் முக்கிய நகரங்களில் உள்ள கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக துணிக் கடைகள், பட்டாசுக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பல மாவட்டங்களில் நேற்று மழை பெய்த போதும், மக்கள் உற்சாகத்துடன் கடை களுக்கு சென்று பொருட்களை வாங் கிச் சென்றனர். பல பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.
சென்னையைப் பொறுத்தவரை கடந்த 3 நாட்களாக பெரும்பாலோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப் பட்டு சென்றுவிட்டதால், நேற்று கடை களில் மக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது.. தியாகராயநகர், புரசைவாக் கம், மயிலாப்பூர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் காலையில் கூட்டம் குறை வாக இருந்த நிலையில், மாலையில் மக்கள் அதிக அளவில் வந்திருந்தனர். போரூர், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் இறுதிகட்ட தீபாவளி விற்பனை நேற்று அனல் பறந்தது. மாநகரின் பல்வேறு பகுதிகளில் பிரபல துணிக் கடை களுக்கு இணையான கூட்டம், சாலையோரக் கடைகளிலும் இருந்தது.
கடந்த சில நாட்களாக தியாகராய நகர் பகுதிகளில் கட்டுக்கடங்காத கூட்டம் நிலவிய நிலையில், அப்பகுதி யில் சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதா கிருஷ்ணன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது கரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தினார். முகக் கவசம் அணியாமல் வந்தவர் களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கினார்.
மதுரை, திருச்சியில்..
மதுரையில் பிளாட்பாரக் கடை களில் தீபாவளிக்கான புத்தாடை, பட்டாசு உள்ளிட்ட பொருட்களின் இறுதிக் கட்ட விற்பனை நேற்று காலை களை கட்டியது. சுற்றுவட்டார கிராம மக்கள், உள்ளூர் வாசிகள் ஆயிரக்கணக் கானோர் பஜார் வீதிகளில் திரண்டனர். நேற்று மதியம் திடீரென மழை பெய்தது. அதையுயும் பொருட்படுத்தாமல் மக் கள் ஆர்வமாக பொருட்களை வாங்கி னர். சிவகங்கை, விருதுநகர், திண்டுக் கல் மாவட்ட மக்களும் திரண்டதால் மதுரை மாசி வீதிகள் ஸ்தம்பித்தன.
தீபாவளி பண்டிகையைக் கொண் டாட பொருட்கள் வாங்க திரண்ட மக் களால் திருச்சி மாநகரின் பல்வேறு சாலைகளிலும் நேற்று போக்குவரத்து நெருக்கடி நிலவியது. சாலையோர தற்காலிக கடைகள், ஆடை விற்பனை யகங்கள், பட்டாசு கடைகள், இனிப் பகங்கள், மகளிர் தையலகங்கள் ஆகியவற்றில் வழக்கத்தைவிட கூட் டம் அதிகமாக இருந்தது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கடைவீதிகள், பொதுமக் கள் கூட்டத்தால் நிரம்பிவழிந்தன. காலை முதல் மாலை வரை மழை பெய்தபோதும், ஜவுளிக்கடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், நகைக் கடைகள் போன்றவற்றில் விற்பனை களைகட்டியது. சாலையோர வியா பாரம் பாதித்தது. குமரி மாவட்டம் தோவாளை மலர்ச்சந்தையில் 230 டன் பூக்கள் விற்பனையாகின. பாவூர் சத்திரம், எட்டயபுரம் உள்ளிட்ட சந்தை களில் பல லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகின.
சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களிலும் தீபாவளி விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. கோவையில் ஒப்பணக்கார வீதி, பெரிய கடை வீதி, காந்திபுரம் கிராஸ்கட் சாலை, நூறு அடி சாலைகளில் நேற்று காலை முதலே மக்கள் கூட்டம் அலை மோதியது.
வேலூரில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தீபாவளிக்கான துணிகள், பட்டாசு, இனிப்புகளை மக்கள் வாங்கிச் சென்றனர். நேதாஜி மார்க்கெட் பகுதியில் கவுரி நோன்புக் காக பானைகள் வாங்கவும், பூஜைப் பொருட்கள் வாங்கவும் கூட்டம் திரண்டதால் தீபாவளி பொருட்கள் விற்பனை களைகட்டியது.
புதுச்சேரி நேரு வீதி நேற்று காலை தொடங்கி மாலை வரை மக்கள் கூட் டத்தால் திக்கித் திணறியது. மழையால் மாலையில் கூட்டம் குறையத் தொடங் கியது. கடலூர், சிதம்பரம், நெய்வேலி, விழுப்புரம் நகர கடை வீதிகளிலும் கூட்ட நெரிசலை காண முடிந்தது. வழக்கமாக தீபாவளிக்கு முந்தைய நாள் செஞ்சி, வேப்பூர் ஆட்டுச் சந்தைகள் களைகட்டும். இந்த ஆண்டு கரோனா பரவலால் வர்த்தகம் குறைவாக காணப்பட்டது.