

கோகுல்ராஜ் கொலை சம்பவம் நடந்த இடம், அர்த்தநாரீஸ்வரர் கோயில் உள் ளிட்ட இடங்களுக்கு யுவராஜை சிபிசிஐடி போலீஸார் அழைத்துச் சென்று நேற்று விசாரணை நடத்தினர்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட் டுள்ள யுவராஜ் நாமக்கல் மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்தில் கடந்த 11-ம் தேதி சரணடைந்தார். நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்ட அவரை 12-ம் தேதி சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்காக காவலில் எடுத்தனர். நீதிமன்றம் 5 நாட்கள் விசாரணை நடத்த ஒப்புதல் கொடுத்த நிலையில், நேற்றுடன் 4 நாட்கள் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் நேற்று காலை கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்த பள்ளிபாளையம் அருகே கிழக்குதொட்டிபாளையம் ரயில் பாதையில் சிபிசிஐடி எஸ்பி நாகஜோதி மற்றும் போலீஸ் அதிகாரிகள் யுவராஜை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதேபோல் கோகுல்ராஜை கடத்திச் சென்றதாக கூறப்படும் திருச்செங் கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் பகுதிக் கும் யுவராஜை போலீஸார் அழைத்துச் சென்றனர். இந்த வழக்கு தொடர்புடைய மற்றொரு பகுதியான சங்ககிரி மலை பகுதிக்கும் யுவராஜ் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடந்தது. காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த விசாரணை 9 மணிக்கு நிறைவடைந்தது.
கோகுல்ராஜ் கொலை தொடர்பாக சிபிசிஐடி போலீஸாருக்கு கிடைத்த தகவல்கள் மற்றும் சம்பவம் நடந்த முறை ஆகியவற்றின் அடிப்படையில் யுவராஜிடம் இந்த விசாரணை நடந்த தாகவும், இதன் மூலம் வழக்கு விசாரணை யில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் போலீஸ் வட்டாரங் கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே கோகுல்ராஜின் சகோதரர் கலைச்செல்வன், அவரது தாத்தா ஆகியோர் நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்துக்கு நேற்று அழைத்து வரப்பட்டு விசாரணை நடந்துள்ளது.