காஞ்சிபுரத்தில் யோகா பயிற்சியில் ஈடுபட்ட காவல் துறையினர்.
தமிழகம்
காஞ்சிபுரத்தில் காவல் துறையினருக்கு எளிய யோகா பயிற்சிகள்
காஞ்சிபுரத்தில் காவல் துறையினருக்கு எளிய யோகா பயிற்சிகள் நேற்று முன்தினம் வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையும், ராமகிருஷ்ணா யோகாஸ்ரம நிர்வாகக் குழுவினரும் இணைந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா தலைமையில் இந்தப் பயிற்சியை நடத்தினர். அப்போது அவர் காவல் துறையினருக்கு பல்வேறு வகைகளில் மன அழுத்தம் ஏற்படுவதாகவும், அதில் இருந்து அவர்கள் விடுபட யோகா கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ராமகிருஷ்ணா யோகாஸ்ரமத்தின் நிர்வாகி ராஜேந்திரன் யோகாவின் நன்மைகள் குறித்து விளக்கினார். புத்துணர்வு, உடல்நலம் ஆகியவை குறித்து செயல்முறை பயிற்சியும் செய்து காண்பித்தார். இந்தப் பயிற்சியில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
