Published : 14 Nov 2020 03:14 am

Updated : 14 Nov 2020 07:02 am

 

Published : 14 Nov 2020 03:14 AM
Last Updated : 14 Nov 2020 07:02 AM

திருப்பூர், புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டங்கள் பிரிப்பு; அதிமுகவில் புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம்: ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

admk

சென்னை

அதிமுகவில் திருப்பூர், புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பு:


அண்ணா தொழிற்சங்கபேரவைச் செயலாளர் பொறுப்பில் உள்ள அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், திருப்பூர் மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் அவர்கள் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.

அதிமுக அமைப்புச் செயலாளராக முன்னாள அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளராக ஆர்.கமலக்கண்ணன், இணைசெயலாளராக சி.கே.துளசிதாஸ்,அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளராக கா.சங்கரதாஸ், மகளிர் அணி துணைச் செயலாளராக ஏ.நூர்ஜகான், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்களாக சி.திருமாறன், எஸ்.செல்வகுமார் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்புக்கு ஒருவர்நியமிக்கப்படும் வரை கட்சிப் பணிகளை கவனிப்பதற்கு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.வைத்திலிங்கம் நியமிக்கப்படுகிறார்.

நிர்வாக வசதியை கருத்தில் கொண்டும், கட்சிப் பணிகளை விரைவுபடுத்தவும் அமைப்புரீதியாக செயல்பட்டு வரும் திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர், புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, புதிய மாவட்டச்செயலாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

அதன்படி, திருப்பூர் வடக்கு, தெற்கு, காங்கேயம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய திருப்பூர் மாநகர் மாவட்டத்துக்கு சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமனும், உடுமலைப்பேட்டை, பல்லடம்தொகுதிகளை உள்ளடக்கிய திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டத்துக்கு அமைச்சர் உடுமலைகே.ராதாகிருஷ்ணனும், தாராபுரம், மடத்துக்குளம் தொகுதிகளை உள்ளடக்கிய திருப்பூர் புறநகர்கிழக்கு மாவட்டத்துக்கு முன்னாள் எம்பிசி.மகேந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கந்தர்வகோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை, ஆலங்குடிஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்துக்கு அமைச்சர் சி.விஜயபாஸ்கர், திருமயம், அறந்தாங்கி தொகுதிகளை உள்ளடக்கிய புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்துக்கு வீட்டுவசதி வாரிய தலைவர் பி.கே.வைரமுத்து, ராஜபாளையம், வில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் தொகுதிகளை உள்ளடக்கிய விருதுநகர் மேற்கு மாவட்டத்துக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி தொகுதிகளை உள்ளடக்கிய விருதுநகர் கிழக்கு மாவட்டத்துக்கு வெம்பக்குடி ஒன்றிய முன்னாள் செயலாளர் கே.ரவிச்சந்திரன் ஆகியோர் மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்.


திருப்பூர் புதுக்கோட்டை விருதுநகர்புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம்ஓபிஎஸ் இபிஎஸ்Admk

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x