

ஆயிரம் வார்த்தைகளால் விளக்க முடியாத விஷயங் களை ஒரு ஓவியம் உணர்த்தி விடும் என்று சொல்வதுண்டு. குறிப் பாக வாசகர்களிடம் கார்ட்டூன் கள் ஏற்படுத்தும் தாக்கம் அளவிட முடியாதது. இந்தியாவின் மிகச் சிறந்த ஓவியர்கள், கார்ட்டூன் கலை ஞர்களைக் கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு ஆண்டுதோறும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது ராய்ப்பூரிலிருந்து வெளிவரும் ‘கார்ட்டூன் வாட்ச்’ இதழ்.
சென்னையில் இன்று விழா
இந்த ஆண்டுக்கான ‘வாழ்நாள் சாதனையாளர் விருதுகள்’, மூத்த ஓவியர் சங்கர், கார்ட்டூனிஸ்ட்டுகள் மதன், கேஷவ் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. சென்னை தியாகராய நகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயா பள்ளியில் இன்று மாலை 6 மணிக்கு நடை பெறும் இந்த விழாவுக்கு ‘தி இந்து’ குழுமத் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான என். ராம் தலைமை வகிக்கிறார்.
‘கார்ட்டூன் வாட்ச்’ இதழ் இந்தியா விலிருந்து ஆங்கிலம், இந்தி என்று இருமொழி படைப்புகளுடன் வெளி வரும் ஒரே கார்ட்டூன் மாத இதழ் என்ற பெருமை கொண்டது. லிம்கா சாதனைப் புத்தகம், ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ மற்றும் ‘யுனிக் வேர்ல்டு ரெக்கார்டு’ ஆகியவற்றில் இந்தச் சாதனை பதிவாகியிருக் கிறது. கடந்த 19 ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செயல்பட்டுவரும் இந்த இதழ், 2003-லிருந்து ராய்ப்பூர், டெல்லி, மும்பை, புனே உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கார்ட்டூன் திருவிழாக்களை நடத்தி, மூத்த கார்ட்டூன் கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
இதுவரை, ஆர்.கே. லக்ஷ்மண், பால் தாக்கரே, பிரான், அபித் சுர்தி, அஜித் நைனன், சுரேந்திரா உள்ளிட்ட கார்ட்டூன் கலைஞர்கள் இவ்விழாக்களில் கவுரவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த முறை விருது பெறும் ஓவி யர் சங்கர், ‘சந்தமாமா’ குழுமத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணி யாற்றியவர். ‘அம்புலிமாமா’ இத ழில் ‘விக்ரமாதித்தன் வேதாளம்’ உள்ளிட்ட கதைகளுக்கு அவர் வரைந்த ஓவியங்கள் தலைமுறை கள் தாண்டி உயிர்ப்புடன் இருக் கின்றன. தனது 92-வது வயதிலும் ‘ ராமகிருஷ்ண விஜயம்’ இதழுக்குத் தொடர்ந்து ஓவியங்கள் வரைந்து வருகிறார்.
புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட் கலை ஞரும் பத்திரிகையாளருமான மதன் பன்முகம் கொண்ட கலை ஞர். ஆனந்த விகடனில் அவர் வரைந்த கார்ட்டூன்கள், உரு வாக்கிய நகைச்சுவை பாத் திரங்கள், எழுதி வந்த தொடர்கள் இன்றும் வாசகர்கள் மனதில் நிற்பவை.
வங்கி அதிகாரியாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஓவி யத்தின் மீதிருந்த காதலால், வங்கிப் பணியை உதறிவிட்டு ‘தி இந்து’ (ஆங்கிலம்) இதழில், 1987-ல் கார்ட்டூனிஸ்ட்டாகப் பணியில் சேர்ந்தவர் கேஷவ். சமூக, அரசியல் தொடர்பான கார்ட்டூன் கள் மட்டுமல்லாமல், கிருஷ்ணர் உள்ளிட்ட தெய்வ உருவங்களை வரைவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
‘கார்ட்டூன் வாட்ச்’ இதழின் ஆசிரியர் திரியம்பக் ஷர்மாவுடன் இணைந்து, ‘பிரீசென்ஸ்’ இணைய இதழின் ஆசிரியர் ’பிரைம் பாயிண்ட்’ னிவாசன் இந் நிகழ்ச்சியை நடத்துகிறார்.