

விருதுநகரில் அதிமுக மாவட்டச் செயலர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, தற்போது மீண் டும் மேற்கு மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு, கிழக்கு மாவட்டச் செயலராக அறிவிக்கப்பட்டவர் அரைமணி நேரத்தில் மாற்றப்பட்டதால் அதி முகவினர் குழப்பம் அடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் லைச் சேர்ந்த கே.டி. ராஜேந்திர பாலாஜி கடந்த முறை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத்துறை அமைச் சராக இருந்தார். தற்போது பால்வளத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் சிறுபான் மையினத்தவருக்கு எதிராகப் பேசியது, மூத்த அமைச்சர்களை மதிக்காமல் அரசு மற்றும் அதிமுகவின் கொள்கைகள் குறித்து பேட்டி அளிந்து வந்ததால் அவர் கடந்த மார்ச் 22-ல் மாவட்டச் செயலர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த ஜூலையில் மீண்டும் மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அடுத்த மாவட்டச் செயலர் பொறுப்புக்கு சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மனின் பெயரும், முன் னாள் எம்.எல்.ஏ. பாலகங்காதரன் பெயரும் அடிபட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு விருதுநகர் மாவட்ட அதிமுக 2 ஆகப் பிரிக்கப்பட்டு, ராஜ பாளையம், வில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் தொகுதிகள் மேற்கு மாவட்டமாகவும், அதன் மாவட்டச் செயலாளராக அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜியும், சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி தொகுதிகள் கிழக்கு மாவட்டமாகவும் அதன் மாவட்டச் செயலராக நரிக்குடி ஒன்றியச் செயலர் இ.ரவிச்சந்திரனும் தலைமையால் அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அடுத்த அரை மணி நேரத்தில் விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலராக அறிவிக்கப்பட்ட இ.ரவிச் சந்திரன் நீக்கப்பட்டு, முன்னாள் சட்டப் பேரவைத் தலைவர் காளிமுத்துவின் தம்பியும், வெம்பக்கோட்டை முன்னாள் ஒன்றியச் செயலருமான கே.ரவிச்சந்திரன் பெயர் அறிவிக்கப்பட்டது. இதனால், அதிமுகவினரிடையே குழப்பம் ஏற் பட்டது.
இ.ரவிச்சந்திரன் ராஜவர்மனின் ஆத ரவாளர் என்பதும், கே.ரவிச்சந்திரன் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜியின் ஆதரவாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.