

தமிழகம் முழுவதும் கருவேல மரங்களை முற்றிலும் அகற்றுவது தொடர்பாக தலைமைச் செயலர் தலைமையில் சென்னையில் இன்று ஆலோசனை நடைபெறு கிறது என உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச் செயலர் வைகோ தாக் கல் செய்துள்ள பொதுநலன் மனு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகி யோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வைகோ வாதிடும் போது, கருவேல மரங்களை முழுமையாக அகற்ற கடுமை யான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்றார்.
கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன் வாதிடும் போது, கருவேல மரங்களை அழிப் பது தொடர்பாக தலைமைச் செயலர் தலைமையில் சென்னை யில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்துக்கு கருவேல மரங்களை அகற்றுவதில் ஈடுபாடு கொண்டவர்கள் அழைக்கப்பட் டுள்ளனர். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.
இதையடுத்து, “கருவேல மரங்களை அழிப்பது தொடர்பான ஆலோசனைகளை வைகோ எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
தலைமைச் செயலர் தலைமையில் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக் கப்படும் முடிவை அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண் டும். பின்னர் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கும்” என நீதி பதிகள் தெரிவித்தார்.
முன்னதாக திண்டுக்கல், நெல்லை மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பின்னர் விசாரணை அக். 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.