ரூ.27 கோடியில் விளையாட்டு துறை கட்டிடங்கள்: முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்

ரூ.27 கோடியில் விளையாட்டு துறை கட்டிடங்கள்: முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்
Updated on
1 min read

தமிழகத்தில் ரூ.27.27 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள விளையாட்டுத் துறை கட்டிடங் களை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தலைமைச் செயலகத்தில் கடந்த 12-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் ரூ.4.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு வீரர்களுக்கான தங்கும் விடுதி, சமையல் கூடம், உணவருந்தும் கூடம், சென்னை ஷெனாய் நகர் நீச்சல் குள வளாகத்தில் ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள குறைந்த தூர நீச்சல் குளம் ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

பிற மாவட்டங்களில்..

மதுரை எம்ஜிஆர் விளை யாட்டரங்கில் ரூ.6 கோடியில் அமைக்கப்பட்டுள்ள நவீன செயற்கை இழை வளைகோல் பந்து மைதானம், திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் ரூ.6 கோடியில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை இழை ஓடுதள பாதை, ரூ.1.50 கோடியில் அமைக் கப்பட்டுள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான தங்கும் விடுதி, ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கையுந்து பந்து மைதானம் ஆகியவற்றையும் முதல்வர் திறந்துவைத்தார்.

ஸ்ரீரங்கத்தில் ரூ. 4.12 கோடி செலவிலான மரத்தாலான தரைதளம், விளையாட்டு வீரர் களுக்கு அறை, கழிவறை, மின்விளக்கு, இருக்கை வசதி கள், நெல்லை அண்ணா விளை யாட்டரங்கில் கையுந்து பந்து மைதானம், நாமக்கல் மாவட்ட விளையாட்டரங்கில் ரூ.1 கோடி யில் நீச்சல் குளம், ரூ.75 லட்சத்தில் மகளிர் விளையாட்டு விடுதி, திருச்செங்கோட்டில் ரூ.10 லட்சத்தில் 400 மீட்டர் ஓடுதளம், கால்பந்து, கையுந்து பந்து, கபடி ஆடுகளங்களுடன் கூடிய சிறிய விளையாட்டரங்கம், தேனி மாவட்ட விளையாட்டரங்கில் ரூ.1.10 கோடியில் நீச்சல் குளம் என மொத்தம் ரூ.27 கோடியே 27 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டுத் துறை கட்டிடங்களை முதல்வர் திறந்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.சுந்தரராஜ், தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், தமிழக அரசின் ஆலோ சகர் ஷீலா பாலகிருஷ்ணன், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) த.சபிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in