Published : 08 Oct 2015 07:58 AM
Last Updated : 08 Oct 2015 07:58 AM

நான்குவழி சாலைகளில் மரங்கள் நட ரூ.1000 கோடி ஒதுக்கீடு: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

நாடு முழுவதும் நான்குவழி சாலை களில் மரங்கள் நடும் பணிக் காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நடப்படும் மரங்களின் வளர்ச்சி செயற்கை கோள் மூலம் கண்காணிக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் நான்குவழி சாலை அமைத்தபோது, ஏற் கெனவே சாலை ஓரங்களில் இருந்த பல ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டன. நான்குவழி சாலை அமைக்கும் பணிகள் முடிந்தபிறகு புதிதாக மரங்கள் நடப்படவில்லை. இதையடுத்து நான்குவழி சாலை அமைப்பதற்காக ஏற்கெனவே வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதில் புதிதாக மரங்களை நட உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் எஸ்.எம்.ஆனந்தமுருகன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்துக்கு பதிலாக 10 மரங்கள் வீதம் புதிதாக மரக் கன்றுகள் நட வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை என்றும், இதனால் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரியும் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு விசாரணைக்கு வந்த போது குறிப்பிட்ட அளவு மரங்கள் நடப்பட்டிருப்பதாக நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து, நான்குவழி சாலையில் புதிதாக மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளதாக என்பதை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆர்.அழகுமணியை வழக்கறிஞர் ஆணையராக நீதிபதிகள் நியம னம் செய்தனர். அவர் நேற்று முன் தினம் தாக்கல் செய்த அறிக்கை யில், நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளபடி நான்குவழி சாலைகள் மரங்கள் நடப்பட வில்லை. பெரும்பாலான பகுதி களில் மரங்கள் சுத்தமாக இல்லை எனத் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. நெடுஞ் சாலை ஆணையம் சார்பில் வழக் கறிஞர் அருள்வடிவேல் சேகர் வாதிடும்போது, இந்தியா முழு வதும் நான்கு வழிச் சாலைகளில் மரங்கள் நடுவதற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. இதுதவிர புதிதாக நான்குவழி சாலை திட்டம் நிறைவேற்றப்படும்போது, அந்த திட்டத்துக்கான மொத்த நிதியில் ஒரு சதவீத நிதியை மரங்கள் நடவும், அவற்றை பராமரிக்கவும் ஒதுக்க மத்திய அரசு உத்தரவிட் டுள்ளது. நான்குவழி சாலைகளில் நடப்படும் மரங்கள் என்ன நிலை யில் உள்ளது என்பதை செயற்கைக் கோள் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என் றார். பின்னர் தேசிய நெடுஞ்சாலை களில் மரங்கள் நடுவது தொடர்பான மத்திய அரசின் சுற்றறிக்கையை தாக்கல் செய்தார்.

இதையடுத்து, நான்குவழி சாலைகளில் விடுபட்ட இடங்களில் மரங்கள் நடும் பணியை அக். 29-ல் தொடங்க வேண்டும். இப்பணி எங்கிருந்து தொடங்கப்படும். எவ்வாறு செயல்படுத்தப்படும் என்ற விவரத்தை அக்.27-ல் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நான்குவழி சாலைகளில் நடப்படும் மரங்கள் என்ன நிலையில் உள்ளது என்பதை செயற்கைக் கோள் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x