

மதுரையில் திமுக, அதிமுக நிர்வாகிகள் திரைமறைவில் கைகோத்துச் செயல்படுவதாகக் கூறப்படும் நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் குற்றச் சாட்டால் அதிமுக அமைச்சர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
தமிழக அரசியலில் அதிமு கவும், திமுகவும் எதிரெதிர் துரு வங்களாகப் பயணித்தாலும், மது ரையில் மட்டும் இரு கட்சியினரும் திரைமறைவில் கைகோத்துச் செயல்படுகிறார்கள்.
விமர்சனம் இல்லை
மத்திய தொகுதி எம்எல்ஏ பிடிஆர்.பழனிவேல் தியாகராஜ னைத் தவிர மற்ற திமுக நிர்வா கிகள், வெளிப்படையாக இதுவரை அதிமுக அமைச்சர்களையும், அவர்களது செயல்பாடுகளையும் பெரிதாக விமர்சிக்கவில்லை. அந்தளவுக்கு மதுரை மாவட்ட திமுக, அதிமுகவினர் நேரடியாகத் தாக்கிப் பேசாமல் அரசியல் செய்து வருகின்றனர்.
தற்போது மதுரையில் மாந கராட்சி முதல் பேரூராட்சி வரை நடக்கும் பல்வேறு அரசு திட்டங்களை பினாமி பெயரில் திமுகவினர்தான் அதிகளவில் டெண்டர் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், திமுக முக்கிய நிர்வாகிகள் நடத்தும் தொழில்களுக்கு, அதிமுகவினரே ஆதரவாக இருக்கும் அளவுக்கு இரு கட்சி நிர்வாகிகளும் நெருக் கமாக இருப்பதாக அக்கட்சிகளின் தொண்டர்கள் ஆதங்கம் அடைந் துள்ளனர். தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், மதுரை அரசியல் களம் மட்டும் எவ்விதப் பரபரப்பும் இன்றி உள்ளது. தற்போதைய சூழலில் அதிமுகவினர் தேர்தல் களப்பணியில் சுறுசுறுப்பாக களமிறங்கி உள்ளனர்.
கோடிட்ட ஸ்டாலின்
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மதுரையில் நடந்த ‘தமி ழகம் மீட்போம்’ கூட்டத்தில் காணொலி வாயிலாகப் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் மீது அடுக்கடுக்காக குற்றம் சுமத்தி னார். மேலும், மதுரையைப் பாழாக்கியதே அவர்கள்தான் என திமுகவினருக்கு கோடிட்டு காட்டினார்.
அவர் மேலும் பேசுகையில், ‘‘மதுரையை மாநகராட்சி ஆக்கியது முதல் மாட்டுத்தாவணி பஸ் நிலை யம், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம், உயர் நீதிமன்றக் கிளைக்கு அடித்தளமிட்டது, மதுரையை சர்வதேச விமான நிலையமாக மாற்றியது, வாடிபட்டியில் கைத்தறி ஜவுளிப்பூங்கா உள்ளிட்ட பிரம்மாண்ட திட்டங்கள் கொண்டு வரப்பட்டது திமுக ஆட்சியில்தான்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைக் கூட அதி முகவினரால் கொண்டுவர முடிய வில்லை. அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையை ரோம் நகராக, சிட்னி நகராக மாற்றுவேன் என்றார். மதுரையை மேலும் கெடுக்காமல் விட்டாலே போதும் என்றார்.
ஸ்டாலின் இவ்வாறு பேசியது அமைச்சர்களையும், அதிமுகவின ரையும் கலக்கமடையச் செய் துள்ளது. ஸ்டாலினுக்குப் பதிலடியாக அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமாரும், செல்லூர் கே. ராஜூவும், மதுரைக்கு வரவே அஞ்சியவர் ஸ்டாலின். திமுக ஆட்சியில்தான் மதுரையில் கட்டப் பஞ்சாயத்து, கொலைகள் நடந்தன எனக் கூறினர்.
அமைச்சர்கள் மீது ஸ்டாலினே நேரடியாக கூறிய குற்றச் சாட்டுகளால் தற்போது மதுரை திமுகவினரும் அமைச்சர்களுக்கு எதிராக அரசியல் செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தள் ளப்பட்டுள்ளனர்.