

சுனாமியால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரம் பேருக்கு குடியிருப்பு களை அரசு கட்டித்தர வேண் டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வலியுறுத்தி யுள்ளார்.
சுனாமியால் பாதிக்கப்பட்டு வீடு இழந்த கடலோர பகுதி மக்களுக்கு குடியிருப்புகளை கட்டித்தர வலியுறுத்தி தமிழ் நாடு கடலோர குடியிருப்பு உரிமைக்கான பிரச்சார இயக்கம் சார்பில், சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரே நேற்று கவனஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர், முதல்வரின் கவ னத்தை ஈர்க்கும் வகையில் கோரிக்கையை வலியுறுத்தி அவருக்கு சுமார் 10 ஆயிரம் தபால் அட்டைகள் அனுப்பப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கூறியதாவது:
தமிழகத்தில் சுனாமியால் பாதிக் கப்பட்ட பல்வேறு மாவட் டங்களில் ஆங்காங்கே ஓரள வுக்கு நலத்திட்டங்கள் செயல் படுத்தப்பட்டுள்ளன. சென்னை யில் கடலோர பகுதிகளில் வாழ்ந்த மக்கள் சுமார் 10 ஆயிரம் பேர் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு பதிவு செய்துள்ளது. மேலும், அவர்களுக்கு அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களுக்கு குடியிருப்புகளை வழங்கவில்லை.
குடியிருப்புகளை கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங் களை நடத்தி வருகின்றனர். சுனாமியால் பாதிக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அரசின் பயனாளிகளின் பட்டி யலில் பெயர்கள் இருந்தும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக் கிறது. எனவே, சுனாமியால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரம் பேருக்கு குடியிருப்புகளை கட்டித்தர அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.