நெமிலியில் விவசாயிகளுக்கான பயிற்சி முகாமில் போலி பில்கள் மூலம் ரூ.3.85 லட்சம் மோசடி: ஓய்வுபெற்ற அதிகாரி மீது லஞ்ச ஒழிப்பு பிரிவினர் வழக்குப்பதிவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

நெமிலி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தில் ரூ.3.85 லட்சம் நிதி மோசடியில் ஈடுபட்டதாக ஓய்வு பெற்ற தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் சிந்தாமணி (61). இவர், கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 2015-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி வரை நெமிலியில் பணியாற்றி வந்தார்.

குறைந்த விலையில் விற்பனை

கடந்த 2014-ம் ஆண்டு நெமிலி வட்டாரத்தில் தமிழக அரசால் விவசாயிகள் காய்கறி உற்பத்தி செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது. இங்கிருந்து கொள் முதல் செய்யப்படும் காய்கறிகள் சென்னையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்தத் திட்டத்தில் விவசாயி களுக்கு பயிற்சி அளிக்க வேலூர் மாவட்ட தோட்டக்கலைத் துறைக்கு ரூ.16.46 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், நெமிலி வட்டத்துக்கு மட்டும் ரூ.13.50 லட்சம் நிதி வழங்கப்பட்டு 900 விவசாயிகள் பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்டனர். ஒவ் வொரு விவசாயிக்கும் தலா ரூ.1,500 வீதம் செலவில் இரண்டு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. உணவு, சிற்றுண்டி, பயணப்படி, பயிற்சிக்கான பயண செலவு என பல்வேறு வகைகளின் கீழ் செலவு செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.

கடந்த 2014-ம் ஆண்டு அக் டோபர் 27-ம் தேதி தொடங்கி நவம்பர் 15-ம் தேதி வரை ஒவ்வொரு குழுவுக்கும் 100 விவசாயிகள் என இரண்டு நாள் பயிற்சியாக மொத்தம் 18 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டன. ஆனால், அரசின் விதிகளின்படி பயிற்சி பெறும் விவசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை முறையாக செலவு செய்யாமல் போலியான பில்கள், ஆவணங்களை தயார் செய்து3 லட்சத்து 85 ஆயிரத்து 500 ரூபாயை சிந்தாமணி மோசடி செய்துள்ளார். இது தொடர்பான புகாரின்பேரில் விசாரணை நடத்திய வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர், சிந்தாமணி மீது மோசடி உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in